திருமணம் எப்போது..தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் அம்மா.. தமன்னாவின் காதலர் பேட்டி
மும்பை: திருமணம் எப்போது என்று தொடர்ந்து கேட்டு அழுத்தம் கொடுப்பதாக தமன்னாவின் காதலர் விஜய் வர்மா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை தமன்னா தற்போது ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அத்திரைப்படம் அடுத்த மாதம் 10ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அரண்மனை 4 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அது மட்டுமின்றி இன்னும் சில படங்களும் அவருடைய கைவசம் இருக்கிறது.

அவர் எனக்கானவர்: படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதிப்படுத்தினார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பின் போதுதான் காதல் ஏற்பட்டது. நான் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நபர் அவர் தான் என்று என் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவர் எனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததால், அவருக்காக நானும் சில கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்று தனது காதல் குறித்து வெளிப்படையாகவே பேட்டியில் கூறியிருந்தார்.
16 வயதில் திருமணம்: இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விஜய் வர்மா, எங்கள் காதல் விவகாரம் வெளியில் தெரிந்த உடன் என் அம்மா எப்போது திருமணம் என்று தொடர்ந்து கேட்டுவருவதாக கூறியுள்ளார். நான் மார்வாடி சமூகத்தை சேர்ந்தவன் என்பதால், எங்கள் சமூகத்தில் ஆணுக்கு 16 வயது ஆனதுமே, திருமண பேச்சை ஆரம்பித்து விடுவார்கள். எனது திருமண குறித்த பேச்சு என்குடும்பத்தில் பல ஆண்டுகளாக இருந்து கொண்டுத்தான் இருக்கிறது. ஆனால், நான் நடிகராகி விட்டதால் அந்த பேச்சு சற்று ஓய்ந்து இருந்தது.
எப்போது திருமணம்: தற்போது தமன்னானை காதலிப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளதால், என் அம்மா ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், எப்போது திருமணம் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நான் அதற்கு பதில் அளிக்காமல் பேச்சை மாற்றிவிடுவேன் என்று தமன்னாவின் காதலர் விஜய் வர்மா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











