Tamannaah: தமன்னாக்கூட திருமணம் எப்போ? விருது விழாவில் கேள்வி.. விஜய் வர்மா சொன்ன நச் பதில்!

சென்னை: IIFA விருது விழாவில் கலந்து கொண்ட 'டார்லிங்ஸ்' நடிகர் விஜய் வர்மாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா மற்றும் தமன்னா இருவரும் புத்தாண்டு தினத்தன்று லிப் லாக் முத்தத்தை பகிர்ந்த வீடியோ காட்சிகள் லீக்கானதில் இருந்தே இருவர் பற்றிய காதல் கிசுகிசுக்கள் பாலிவுட்டை கலக்கி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Vijay Varma great escape from Tamannaah Bhatia wedding rumours at IIFA

ஜெயிலர் ஹீரோயின் தமன்னா:

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கினார் தமன்னா.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முதல்முறையாக சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் வாய்ப்பு தமன்னாவுக்கு கிடைத்துள்ளது.

Vijay Varma great escape from Tamannaah Bhatia wedding rumours at IIFA

விஜய் வர்மாவுடன் லிப் லாக்:

விஜய் வர்மாவுடன் இந்தி படம் ஒன்றில் நடித்து வரும் நடிகை தமன்னா அவருடன் இந்த ஆண்டு புத்தாண்டை கொண்டாடி உள்ளார். புத்தாண்டு இரவில் வாணவேடிக்கை நிகழும் போது இருவரும் லிப் லாக் முத்தங்களை பரிமாறிக் கொண்ட காட்சிகள் அந்த கொண்டாட்ட வீடியோவில் இடம்பெற்று ரசிகர்களை ஷாக் ஆக்கின.

இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டதற்கு, நாங்கள் இருவரும் ஒரு படத்தில் நடித்து வருகிறோம். இப்போதைக்கு அதுமட்டும் தான் சொல்ல முடியும் என கூறி நகர்ந்து விட்டார். ஆனாலும், தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்ற காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Vijay Varma great escape from Tamannaah Bhatia wedding rumours at IIFA

திருமணம் எப்போ விஜய்?:

இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற IIFA விருது விழாவில் கோட் சூட் அணிந்துக் கொண்டு செம ராயலாக கலந்து கொண்ட நடிகர் விஜய் வர்மாவிடம் நிரூபர் ஒருவர் ஏதாவது சந்தோஷமான சுப செய்தி இருக்கா? என மறைமுகமாக கேள்வி எழுப்பினார்.

உடனடியாக வெட்கப்பட்டு முகமெல்லாம் சிவந்த விஜய் வர்மா சீக்கிரமே நல்ல படத்தை கொடுக்க முயல்கிறேன் என சொல்லி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார். நடிகை தமன்னா பற்றித் தான் நிரூபர் கேட்கிறார் என்பதை புரிந்துக் கொண்டே விஜய் வர்மா வெட்கப்பட்டார் என பாலிவுட் வட்டாரங்கள் அவரது பேட்டியை டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X