தமன்னாவிடம் முதன்முறையாக டேட்டிங் கேட்டது இப்படித்தான்.. விஜய் வர்மா ஓபன் டாக்
சென்னை: நடிகை தமன்னா கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்த அவர் பாலிவுட்டிலும் என்ட்ரி ஆனார். அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது அவருக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தச் சூழலில் தமன்னாவுடன் முதன்முதலாக டேட்டிங் சென்றது குறித்து விஜய் வர்மா சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
பாலிவுட்டில் பிஸி: தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருக்கிறது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
காவாலா தமன்னா: பாலிவுட்டில் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போயினர் என்றுதான் சொல்ல வேண்டும்.
காதல்: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது அவருக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலை இரண்டு பேருமே சமீபத்தில்தான் உறுதி செய்திருந்தனர். ஆனால் திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேசமயம் அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தமன்னா வீட்டில் வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் வர்மா பேட்டி: இந்நிலையில் தமன்னாவுடன் முதன்முறையாக டேட்டிங் சென்றது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய விஜய் வர்மா, "லஸ்ட் ஸ்டோரிஸில் நானும் தமன்னாவும் நடிக்கும்போது டேட்டிங் செல்ல ஆரம்பிக்கவில்லை. அப்போது ஒரு பார்ட்டி வைக்க வேண்டும் என்றும் நாங்கள் பேசினோம். சொன்னபடியே ஒரு நாள் பார்ட்டியும் வைத்தோம். அதில் நான்கு பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள். அப்போது தமன்னாவிடம் நான், உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன் என்றேன். அந்த நாளிலிருந்து 20 முதல் 25 நாட்கள் கழித்து முதன்முறையாக இரண்டு பேரும் டேட்டிங் சென்றோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











