Bigg Boss 7 - பிக்பாஸ் 7.. எனக்கு பசங்க வெளில இருக்காங்க.. குத்த சொல்வாங்க.. பிரதீப்பை மிரட்டிய விஜய் வர்மா
சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் 7ல் பிரதீப் ஆண்டனியை விஜய் வர்மா மிரட்டியது ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்தப் போட்டியாளர்களை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் யாருமே பிரபலமானவர்களாக இல்லையே இந்த சீசன் சுவாரசியமாக போகுமா என்ற சந்தேகத்தை கிளப்பினர். ஆனால் தற்போதைய போட்டியாளர்கள் நாளுக்கு ஒரு கண்டெண்ட் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இன்றைய பஞ்சாயத்து: அதன்படி பிக்பாஸ் 7 வீட்டில் தினமும் ஒரு பஞ்சாயத்து நடக்க ஆரம்பித்திருக்கிறது. அப்படித்தான் இன்றும் ஒன்று நடந்தது. அதாவது இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து மூன்று பேரும், ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து மூன்று பேரும் வீட்டு பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் இரண்டு வீடுகளிலும் எந்த விஷயங்களை எல்லாம் இம்ப்ரூவ் செய்துகொள்ள வேண்டும் என சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் விஜய் வர்மா, மணிசந்திரா, கூல் சுரேஷும்; ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து யுகேந்திரன், அனன்யா, நிக்ஸனும் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விஜய் வர்மா மிரட்டல்: அதன்படி பேசிய விஜய் வர்மா எடுத்ததுமே பிரதீப் பக்கம் தனது டார்கெட்டை திருப்பினார். பிரதீப் ஒருமுறை என்னை ஷூவால் தட்டிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் ஒரு சாரிக்கூட கேட்கவில்லை. அதேபோல் மாயா ஒருமுறை நின்றுகொண்டிருந்தார் அவரையும் தள்ளிவிட்டு சென்றுவிட்டார். பிரதீப் நீங்க அட்லீஸ்ட் ஒரு சாரி சொல்லிருக்கலாம்.
சூடுக்காரன்: நான் சூடுக்காரன் எனக்கு கோபம் வந்து திடீர்னு கையை வெச்சு இடிச்சிட்டேனு வெச்சுக்கோங்க உங்க மூக்கோ, வாயோ உடையலாம். உடனே உங்களை ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகும் நிலைமை வரலாம். அதேபோல் சாவடிச்சிடுவேன்னு சொல்றீங்க, 24 அடிலேர்ந்து கீழ விழணும்னு சொல்றீங்க, கத்தியை வெச்சு குத்திடுவேனு சொல்றீங்க. உங்களிடம் ஒன்னு சொல்றேன். என் மேல பாசமான பசங்க வெளில இருக்காங்க. நீங்க வெளில போன பிறகு இங்க வா என்ன ரொம்ப பேசுற எங்க குத்து பார்ப்போம்னு சொல்வாங்க அதெல்லாம் டேஞ்சர். சோ தவிர்த்துடுங்க என சொன்னார்.
ஹவுஸ் மேட்ஸ் ஷாக்: விஜய் வர்மாவின் இந்தப் பேச்சு அதிலும் வெளியே பசங்க இருக்காங்க என்பதும் திருப்பி அடிச்சா மூக்கு, வாய் உடைஞ்சிடும் என்று சொன்னதும் ஹவுஸ் மேட்ஸுக்கு பெரும் ஷாக் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் நீங்கள் இப்படி சொல்லியிருக்கக்கூடாது என்று கூறினர். ஆனால் விஜய் வர்மா ஒத்துக்கொள்ளவே இல்லை. ஒருகட்டத்தில் விஷ்ணு எழுந்து விஜய்யிடம் அவரிடம் வயலென்ஸ் கூடாது என்று சொல்கிறீர்கள் ஆனால் நீங்களே வயலென்ஸ் போல் பேசுகிறீர்களே. அவர் தெரியாமல்கூட தட்டியிருக்கலாம் என கூறினார்.
அதற்கு விஜய் வர்மாவோ ஒரு தடவை இரண்டு தடவை செய்யலாம் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் என கேட்க விஷ்ணு சரி இப்போ நான் செருப்பு கால வெச்சு தட்டுறேன் என்னை அடிச்சிடுவீங்களா என கேட்க எங்க நீ தட்டி பாரு பார்ப்போம் என்று சொன்னார். ஒருகட்டத்தில் நிலைமை விபரீதமாகிவிடுமோ என உணர்ந்த சக ஹவுஸ் மேட்ஸ் பிரதீப்பிடம் விஜய் சொன்ன கருத்து சரி ஆனால் சொல்லிய விதம் தவறு என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தனர்.
இதை எதிர்பார்க்காத விஜய் தன்னுடைய முரட்டு பிடிவாதத்துடன் தான் சொன்ன விதம்தான் சரி என்ற நிலையிலிருந்து பின்வாங்கி; நான் சொன்ன விதம் தவறாக இருந்திருந்தால் எல்லோரும் மன்னித்து விடுங்கள் என்று தவறை ஒத்துக்கொண்டார். கடந்த பிக்பாஸ் சீசனில் கைகலப்புவரை சென்றது. இப்போது ஒருவர் வீட்டுக்கு வெளியே என் பசங்க இருக்கிறார்கள் என்று டான் ரேஞ்சுக்கு மிரட்டுகிறார். நாளை கமல் ஹாசன் ஹவுஸ் மேட்ஸுடன் பேசும் நாள். எனவே விஜய் வர்மா இப்படி பேசியதற்கு அவரது ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?.. பொறுத்திருந்து பார்ப்போம்..


Click it and Unblock the Notifications











