Vijay: ரசிகர்களை பார்த்து துள்ளி குதித்த விஜய்.. வேலையை காட்டிய வெங்கட் பிரபு.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனையறிந்த ரசிகர்கள் விஜய்யை படப்பிடிப்புத் தளத்தில் சென்று சந்தித்தனர். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெங்கட் பிரபு ஷூட் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
விஜய் வீடியோவை வெளியிட்ட வெங்கட் பிரபு
வாரிசு, லியோ படங்களைத் தொடர்ந்து தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். தளபதி 68 என தொடங்கிய இந்தப் படம் தற்போது GOAT என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என தளபதி 68 படத்துக்கு டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. நியூ இயர் ஸ்பெஷலாக விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டிலை அறிவித்தது படக்குழு.

சென்னையில் தொடங்கிய GOAT ஷூட்டிங் பின்னர் தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் என தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் GOAT படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்து இலங்கைக்கு செல்கிறது படக்குழு. இந்நிலையில், GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் வேறு வழியே இல்லாமல் ரசிகர்களை சந்தித்தார் விஜய்.
மூன்று முறைக்கும் மேலாக விஜய் ரசிகர்களை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதேபோல், வேன் ஒன்றின் மீது ஏறிய விஜய் ரசிகர்களை நோக்கி கையசைத்து ரஞ்சிதம் கிஸ் பறக்கவிட்ட வீடியோவும் ட்ரெண்டானது. விஜய்க்காக திரண்ட ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து GOAT படக்குழுவினரே மிரண்டு விட்டனர்
இந்நிலையில், விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோவை எடிட் செய்து தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் வெங்கட் பிரபு. GOAT படத்தின் பிஜிஎம் உடன் எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோ விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. ரசிகர்களை பார்த்ததும் துள்ளி குதித்து வரும் விஜய், வேனின் மீது ஏறி அவர்களுக்கு வைப் கொடுக்கிறார். GOAT பிஜிஎம் உடன் பார்க்கும் போது இந்த வீடியோ செம்ம மாஸ் காட்டுகிறது.
முக்கியமாக மீசை இல்லாத ஹேர் ஸ்டைலுடன் இருக்கும் வித்தியாசமான கெட்டப் ரசிகர்களுக்கே ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. அதேநேரம் பொங்கலுக்கு GOAT அப்டேட் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த வீடியோவே போதும் எனத் தெரிகிறது. விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் GOAT ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











