Vijay vetrimaaran: "விஜய் அரசியலுக்கு வரட்டும்.. ஆனா அவருக்கு ‘அது’ வேண்டும்..” வெற்றிமாறன் அட்வைஸ்!
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.
அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் 550 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், லியோ சக்சஸ் மீட்டில் தனது அரசியல் என்ட்ரி குறித்து மறைமுகமாக பேசியிருந்தார்.
இதனையடுத்து விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கருத்துத் தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

விஜய்க்கு வெற்றிமாறன் அட்வைஸ்
விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். பிரம்மாண்டமாக உருவான லியோ, இதுவரை 550 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இதனிடையே லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி, சில தினங்களுக்கு முன்னர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் விஜய் உட்பட லியோ படக்குழுவினரும் ரசிகர்களும் கலந்துகொண்டனர். அப்போது விஜய் பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலானது. 2026ல் கப்பு முக்கியம் பிகிலும் என பஞ்ச் கொடுத்த விஜய், சோஷியல் மீடியாவில் உணர்ச்சிவசப்பட வேண்டாம், நமக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கு என ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்தார். அதேபோல், ஆங்காங்கே தனது அரசியல் எனட்ரி குறித்து பொடி வைத்து பேசியிருந்தார்.
இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வருவது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதுபற்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் பிரபலங்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சிலர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் எனவும், இன்னும் பலர் விமர்சனம் செய்தும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறனும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
அதாவது, "விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் செயல்பட்டு வருகிறார். அவர் அரசியலுக்கு வரட்டும். ஆனால், முன்னதாக அதற்கான கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அரசியல் என்பது அனைவருக்கும் சவாலானது. அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களே அரசியலுக்கு வர விரும்புகிறார்கள்" என கூறியுள்ளார்.

வெற்றிமாறனின் இந்த கருத்து சரியானது என பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், தமிழ்நாட்டில் அரசியலிலும் சமூகத்திலும் சினிமா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக நல்லவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. சமூகத்தில் நல்லவிதமான உரையாடல்களை சினிமா ஏற்படுத்தியுள்ளது. ஜெய் பீம் போன்ற படங்கள் வெளியான பிறகு அந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்துள்ளதாகவும் வெற்றிமாறன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











