Vijay Birthday - நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் தளபதி விஜய்.. அசத்தல் வீடியோ

சென்னை: Vijay Birthday (விஜய் பிறந்தநாள்) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் அவரது வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளது.

கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்க லலித்குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் படத்தில் சஞ்சய் தத்,அர்ஜுன், கௌதம் மேனன்,மிஷ்கின், மாத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், வையாபுரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துக்கொண்டிருக்கிறது. மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய்யும், லோகேஷ் கனகராஜும் இணைந்திருப்பதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படத்தின் பிஸ்னெஸ்ஸும் பல கோடி ரூபாய்க்கு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

Vijay video has been Aired in New Yorks Times Square BillBoard For Vijay birthday

ஷூட்டிங்: படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 2000 டான்ஸர்களுடன் விஜய் நடனமாடும் பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு படமாக்கப்பட்டது. அதில் விஜய்யுடன் மடோனா செபாஸ்டியன், அர்ஜுன் உள்ளிட்டோரும் நடனம் ஆடினார்கள் என்றும் சஞ்சய் தத் தனது கேங்குடன் நடந்துவருவது போன்று சில காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் வெளியானது.

க்ளைமேக்ஸ் ஷூட்டிங்: பாடல் ஷூட்டிங் முடிந்ததும் மாணவ, மாணவிகளை சந்திப்பதற்காக இரண்டு நாட்கள் பிரேக் எடுத்தார் விஜய்.அதனையடுத்து மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். மும்முரமாக க்ளைமேக்ஸ் ஷூட்டிங் நடந்துவந்ததாகவும் ஆனால் மழை காரணமாக மீண்டும் ஷூட்டிங் தடைபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அளித்த்த பேட்டியில்கூட இன்னும் 10 நாட்கள் ஷூட்டிங் விஜய்க்கு பாக்கி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

முதல் சிங்கிள்: நிலைமை இப்படி இருக்க விஜய்யின் 49ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி படத்திலிருந்து நா ரெடி என்ற சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பான ப்ரோமோவை நேற்று படக்குழு வெளியிட்டது. பாடலை விஜய் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தவிர்த்து நாளை மேலும் சில அப்டேட்டுகள் வெளிவரலாம் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Vijay video has been Aired in New Yorks Times Square BillBoard For Vijay birthday

டைம் ஸ்கொயர்: இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களின் ஏற்பாட்டின் பேரில் நியூயார்க் டைம் ஸ்கொயர் பில்போர்டில் விஜய்யின் வீடியோ ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. அதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக இளையராஜா உள்ளிட்டோரின் வீடியோக்கள் அந்த பில்போர்டில் ஒளிபரப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 68: லியோ படத்தை முடித்துவிட்டு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதற்கிடையே வெங்கட் பிர்பு படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்றும் அதன் பிறகு அரசியலுக்கு வருவார் என்று சிலர் கூறினர். ஆனால் அதனை திரை ஆர்வலர்கள் பலர் மறுத்து விஜய் தொடர்ந்து நடிப்பார் என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X