»   »  நாட்டையே அதிரவைத்த விஜய் வீடியோ... 'மதுரவீரன்' படத்தில் வருமா?

நாட்டையே அதிரவைத்த விஜய் வீடியோ... 'மதுரவீரன்' படத்தில் வருமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
மதுர வீரன் படத்தில் விஜய் உள்ளாரா.. எப்படி ?

சென்னை: விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியிருக்கும் 'மதுரவீரன்' படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் பிப்ரவரி 2-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனியும் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இந்தப் படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இது ஜல்லிக்கட்டு படம் மட்டுமல்ல அதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும் பேசுகிற படம் எனக் கூறியிருக்கிறார் பி.ஜி.முத்தையா.

சண்முக பாண்டியன்

சண்முக பாண்டியன்

சண்முகபாண்டியன் நடித்த முதல் படமான 'சகாப்தம்' தோல்வியடைந்ததை அடுத்து இந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர். இப்படத்தின் 'என்ன நடக்குது நாட்டுல...' எனும் சமூக கருத்து பாடல் யூ-ட்யூபில் ஹிட் அடித்தது.

ஜல்லிக்கட்டு பற்றிய படம்

ஜல்லிக்கட்டு பற்றிய படம்

"ஜல்லிக்கட்டு பற்றிய படம் என்றால் ஹீரோ மாட்டை அடக்குவது போன்ற காட்சிகள் எல்லாம் படத்தில் வைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இப்படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

உண்மையான மாடுபிடி வீரர்கள்

உண்மையான மாடுபிடி வீரர்கள்

படத்தில் வரும் ப்ளாஷ்பேக் காட்சியில் அந்த பகுதியில் உள்ள உண்மையான மாடுபிடி வீரர்களின் பெயர்களும், அந்தப் பகுதியில் உள்ள மாடுபிடி வீரர்களையும் பயன்படுத்தியுள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பே கதை உருவாக்கிவிட்டோம்.

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய சிறிய தொகுப்பு படத்தில் இருக்கிறது" எனக் கூறியிருக்கிறார் இயக்குநர் பி.ஜி.முத்தையா. இதில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் விஜய் பேசிய வீடியோவும் இடம்பெறும் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜய் வீடியோ

நடிகர் விஜய் நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் தன் கருத்தை வெளியிடுவார். அப்படித்தான் ஜல்லிக்கட்டு பிரச்னையின் போது கூட ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். இந்த வீடியோவும் இடம்பெற்றால் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

English summary
Vijayakanth's son Shanmuga pandian has acted in 'MaduraVeeran' directed by cinematographer PG Muthiah. PG Muthiah said that "This is not only the film about Jallikattu, speaks also the politics behind it." The video of Vijay has been supported Jallikattu protest will also be in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil