Vijay: நெல்சன், அட்லீ ஓவர்... அடுத்து லோகேஷ் தான்... இண்டஸ்ட்ரியை மிரட்டும் விஜய் தம்பிகள்!

சென்னை: ரஜினியின் ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கானின் ஜவான் இன்று வெளியானது. இந்தாண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன்மூலம் நெல்சன், அட்லீ இருவருமே சூப்பரான சக்சஸ் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து விஜய்யின் லியோ மூலம் லோகேஷ் கனகராஜ்ஜும் அடுத்த சம்பவம் செய்ய காத்திருப்பதாக நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 Vijay: Vijay fans are celebrating as Lokeshs Leo is followed by Nelson and Atlee

இண்டஸ்ட்ரியை மிரட்டும் விஜய் தம்பிகள் : ஷாருக்கான் - இயக்குநர் அட்லீ கூட்டணியில் இன்று வெளியான ஜவான் படத்துக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழி ரசிகர்களும் ஜவான் படத்தை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக கடந்த மாதம் வெளியான ரஜினியின் ஜெயிலர் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது. இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.

ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 600 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்கள் பரிசாக கொடுத்து அசத்தினார் கலாநிதிமாறன். இந்நிலையில், இன்று வெளியான ஜவானும் ஆல் ஏரியாவிலும் அசரடித்து வருகிறது. இதனால், நெல்சனைத் தொடர்ந்து அட்லீயும் பாஸ் செய்துவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இவர்களின் வரிசையில் லோகேஷ் கனகராஜ்ஜின் சம்பவம் அடுத்த மாதம் அரங்கேறும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதாவது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நெல்சன், அட்லீ, லோகேஷ் கனகராஜ் மூவரும் விஜய்யின் செல்ல தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், இந்த வாய்ப்பு கிடைக்க விஜய் தான் காரணம் என அவருக்கு நன்றி கூறினார்.

அதேபோல், ஜவான் வாய்ப்பு கிடைக்க விஜய்ண்ணா தான் காரணம் என, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார். விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் அட்லீ. விஜய் - நெல்சன் கூட்டணியில் வெளியான பீஸ்ட், பெரிதாக வெற்றிப் பெறவில்லை என்றாலும், வசூலில் குறை வைக்கவில்லை. இதனால், விஜய்யின் குட்புக்கில் இடம்பிடித்துள்ள லோகேஷ், லியோவில் மாஸ் சக்சஸ் கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விதவிதமான மீம்ஸ்களுடன் லோகேஷ் கனகராஜ்ஜை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். மேலும், அட்லீ, நெல்சன், லோகேஷ் மூவரையும் விஜய் எடுத்த போட்டோவை டிவிட்டரில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூல் செய்ததை போல, அட்லீயின் ஜவான் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் விஜய்யின் லியோவும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்கக வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X