Vijay: "விஜய்யின் ஃபேவரைட் ஹீரோ யார் தெரியுமா..? ஒரு படம் கூட மிஸ் பண்ண மாட்டார்” வெளியான சீக்ரெட்
சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படம், மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில் உருவாகி வருகிறது. இந்நிலையில், GOAT படத்தில் நடித்து வரும் ஜெயராம், விஜய்யின் ஃபேவரைட் ஹீரோ யார் என்ற ரகசியத்தை பகிரங்கமாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ஃபேவரைட் ஹீரோ: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக கலக்கி வரும் விஜய்க்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் படங்கள் தான் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டு வருகிறது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான சம்பவம் செய்திருந்தது.

லியோவை தொடந்து விஜய் தற்போது நடித்து வரும் GOAT படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இப்போது மலையாள நடிகர் ஜெயராமும் GOAT படத்தில் இணைந்துள்ளார். விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் ஜெயராம் நடித்திருந்தார்.
அதேபோல், வெங்கட் பிரபுவின் சரோஜா படத்திலும் ஜெயராம் வில்லனாக நடித்திருந்தார். இப்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் ஜெயராமும் இணைந்துள்ளது, GOAT படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், GOAT படத்தில் விஜய்யுடன் நடிப்பது குறித்து ஜெயராம் மனம் திறந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் ஃபேவரைட் ஹீரோ யார் என்ற ரகசியத்தையும் ஜெயராம் கூறியுள்ளார்.

GOAT படப்பிடிப்பில் விஜய்யுடன் பேசிக் கொண்டிருந்த போது தான், அவர் மலையாள படங்களை அதிகம் பார்ப்பது பற்றி என்னிடம் கூறினார். முக்கியமாக மம்முட்டியின் தீவிர ரசிகர் என்றும், அவர் நடித்த படங்கள் அனைத்தையும் மிஸ் செய்துவிடாமல் பார்த்து வருவதாகவும் விஜய் சொன்னார். கடைசியாக மம்முட்டி நடிப்பில் வெற்றிப் பெற்ற காதல் படத்தையும் பார்த்துவிட்டு, மம்முட்டியின் நடிப்பை பாராட்டினார் விஜய் என ஜெயராம் மனம் திறந்துள்ளார்.
விஜய்க்கு மம்முட்டியை தான் இவ்வளவு பிடிக்கும் என்பதே எனக்கு தெரியாது. இதுவரை இந்த விஷயத்தை நான் மம்முட்டியிடமும் சொன்னது கிடையாது எனவும் ஜெயராம் கூறியுள்ளார். விஜய்க்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் மலையாள முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே இல்லாத ஓபனிங் விஜய்க்கு கிடைக்கிறது. இதனால் விஜய்யின் ஃபேவரைட் ஹீரோ மம்முட்டி தான் என ஜெயராம் பேசிய வீடியோவை மல்லுவுட் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











