Vijay: "இங்க நான் வச்சது தான் ரூல்ஸ்.." விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட தளபதி!
சென்னை: லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், தற்போது வெளிநாடு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி பிரிவு நிர்வாகிகளுக்கான மீட்டிங் சென்னையில் நடைபெற்றது.
புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இதில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சில முக்கியமான ஆர்டர் போடப்பட்டுள்ளதாம்.
முக்கியமாக சமூக வலைத்தளங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் எப்படி கண்ணியமாக இருக்க வேண்டும் என பெரிய பட்டியலே போட்டுள்ளார் விஜய்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஆர்டர்: கோலிவுட்டின் மாஸ் நடிகராக வலம் வரும் விஜய் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. வாரிசு படத்தைத் தொடர்ந்து லியோவில் நடித்து முடித்துள்ளார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. இதன் தொடர்ச்சியாக வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனிடையே விரைவில் அரசியலில் களமிறங்கவும் முடிவெடுத்துள்ளாராம் விஜய். ஏற்கனவே 'விஜய் மக்கள் இயக்கம்' என்பதை தொடங்கிய தளபதி, மாணவர்களுக்கு கல்வி உதவி உட்பட பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூட தொகுதிவாரியாக முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பத்தாவது, பண்ணிரெண்டாவது மாணவ, மாணவியர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கினார்.
இன்னொருபக்கம் புஸ்ஸி ஆனந்த் தலமையில் அடிக்கடி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கான மீட்டிங் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி பிரிவு நிர்வாகிகளுடன் மீட்டிங் நடத்தினார் புஸ்ஸி ஆனந்த். அதன்பின்னர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சில முக்கியமான கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளதாம். முக்கியமாக சமூக ஊடகங்கள், வலைத்தளங்களில் கண்ணியமாக கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
அதாவது, இயக்கத்தின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளுக்கு ரியாக்ட் செய்யக் கூடாது, ஷேர் செய்யக் கூடாது.
எந்த வகையிலும் தனிநபர் தாக்குதல் இருக்கக் கூடாது.
மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் நல்லிணக்கப் பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் குறித்து கருத்து பரிமாற்றம், தர்க்கங்கள் நாகரிகத்துடனும், ஆதாரத்தின் அடிப்படையிலும் கருத்தியலாகவும் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு போடப்பட்டுள்ள இந்த கண்டிஷன் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதன் மூலம் விரைவில் தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











