Vijay: அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜய்... தளபதி 68 ஓவர்... லியோ வைப் லோடிங்!!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பிஸியாக நடந்து வரும் நிலையில், தளபதி 68ல் பிஸியாகிவிட்டார் விஜய்.
வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்திற்கு மேக்கப் டெஸ்ட் எடுப்பதற்காக விஜய் அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜய்யின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை திரும்பிய விஜய்: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய், லியோ படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. விஜய் - லோகேஷ் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளதால், லியோ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் லோகேஷின் யுனிவர்ஸில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம் விஜய் தனது 68வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதேபோல், யுவன் ஷங்கர் ராஜா தளபதி 68 படத்திற்கு இசையமைக்கிறார். விஜய்யுடன் பிரபுதேவா, மாதவன், சினேகா, ப்ரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டாலும், இதுவரை அபிசியலாக அப்டேட் வெளியாகவில்லை.
இதனிடையே லியோ படப்பிடிப்பை முடித்துவிட்டு, அதே வேகத்தில் அமெரிக்கா பறந்தார் விஜய். அவருடன் இயக்குநர் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் அமெரிக்கா சென்றிருந்தனர். தளபதி 68ல் விஜய் டபுள் ஆக்ஷன் ரோலில் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான மேக்கப் டெஸ்ட், பாடி ஸ்கேனிங் ஆகியவை எடுப்பதற்காகவும் அமெரிக்கா சென்றிருந்தனர். விஜய்க்கு பாடி ஸ்கேனிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார்.
இதனால், தளபதி 68 விஜய்யின் சம்பவங்கள் தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக விஜய்யின் லுக் ரசிகர்களே எதிர்பார்க்காத அளவில் இருக்கும் என சொல்லப்படுகிறது. தளபதி 68 படத்திற்காக கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவில் இருந்த விஜய், தற்போது சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணிந்தபடி விஜய் வெளியேறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ரொம்பவே சிம்பிளான ட்ரெஸ்ஸிங் ஸ்டைலில் விமான நிலையத்தில் வலம் வருகிறார் விஜய். இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள், இனி லியோ வைப் தான் என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார், அடுத்த வாரத்திலிருந்து லியோ அப்டேட் வெளியாகும் எனக் கூறியிருந்தார். மேலும், லியோ இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படும் என்றார்.
இந்நிலையில் விஜய் தற்போது அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதால், இனி அடுத்தடுத்து லியோ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லியோ செகண்ட் சிங்கிளும் இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் குட்டி ஸ்டோரி ஒர்க் அவுட் ஆகுமா..? அரசியல் என்ட்ரி பற்றி பேசுவாரா..? என்றெல்லாம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











