Vijay: வாவ்!! ‘ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி...’ கயிறு கட்டி அந்தரத்தில் பாய்ந்த விஜய்!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் பெரும் நட்சத்திரக் கூட்டணியே நடித்துள்ளது.
விரைவில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விஜய் ரிஸ்க் எடுத்து நடித்த சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
ரிஸ்க் எடுத்த விஜய்: வாரிசு படத்தைத் தொடர்ந்து லியோவில் நடித்து முடித்துள்ளார் விஜய். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகியுள்ள லியோ, மிகப் பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் லியோ அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள், நடிகைகள் லியோவில் நடித்துள்ளனர். 125 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்ட லோகேஷ், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். அதேநேரம் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள், சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோரின் க்ளிம்ப்ஸ் வீடியோவை அவர்களின் பிறந்தநாளில் வெளியிட்டு மாஸ் காட்டினார்.
இந்நிலையில் லியோ படத்தின் இடைவேளை காட்சியில் விஜய்யின் ஆக்ஷன் வெறித்தனமாக இருக்கும் என தயாரிப்பாளர் லலித் குமார் கூறியிருந்தார். இடைவேளைக்கு முந்தைய 10 நிமிட காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதேபோல், இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் விஜய் ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கோலிவுட் ஹீரோக்களில் விஜய் அளவிற்கு டான்ஸ் ஆடும் நடிகர்கள் ரொம்பவே குறைவு. அதேபோல் ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுப்பதிலும் விஜய் எப்போதுமே தனி ரகம் தான். இதனால் லியோவில் விஜய்யின் ஆக்ஷன் ட்ரீட்டை கொண்டாட ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் ஆக்ஷன் காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்த விஜய்யின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், விஜய்யின் முதுகில் கயிறு கட்டப்பட்டிருக்க வேகமாக ஓடி வரும் அவர், ஒரே ஜம்ப்பில் அந்தரத்தில் பறந்து லேண்டிங் ஆகிறார். இந்த மேக்கிங் வீடியோ லியோ படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்ததாக விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். ஆனால், இது ஜில்லா படத்தின் மேக்கிங் வீடியோ என தெரியவந்துள்ளது. நேசன் இயக்கத்தில் 2014ல் வெளியான ஜில்லா படம் விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்தது. இதில் அவருடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











