ரெடியாகுது செட்: கர்நாடக சிறையில் மோதப் போகும் விஜய், விஜய் சேதுபதி..!

By

Recommended Video

Thalapathy 64 release date: மீண்டும் இருவர் தளபதி 64யில் இணைந்துள்ளனர்

சென்னை: கர்நாடக சிறையில் விஜய்யும் விஜய்சேதுபதியும் மோதும் காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.

'மாநகரம்' மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அந்த படத்திலேயே கவனம் பெற்றார். அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கினார். இதில் நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றது.

vijay-vijay sethupathi to meet in Karnataka prison

இதையடுத்து அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். சேவியர் ப்ரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நடக்க இருக்கிறது. இங்குள்ள சிறையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு அனுமதி கேட்டிருந்தது. டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், செட் வேலைகள் முடிவடையாததால், ஷூட்டிங் தள்ளிப் போயுள்ளது. அடுத்த வாரம் முதல் அங்கு ஷூட்டிங் நடக்க இருக்கிறது.

இங்கு ஹீரோ விஜய்யும் வில்லன் விஜய் சேதுபதியும் மோதும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக படக்குழுத் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X