Vijay: "Wow! படம் பயங்கரமா இருக்கு..” பொங்கல் ரேஸில் விஜய் பாராட்டிய படம் எதுன்னு தெரியுமா..?
சென்னை: விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், GOAT ஷூட்டிங் இல்லாத நேரத்தில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான படங்களை பார்ப்பதில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறாராம். அப்படி அவர் ஒரு படத்தை திரையரங்கில் பார்த்து மிரண்டு விட்டதோடு படக்குழுவையும் பாராட்டியுள்ளாராம்.
படம் பயங்கரமா இருக்கு: கடந்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியானது. அதனுடன் அஜித் நடித்த துணிவும் ரிலீஸாகி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தது. விஜய், அஜித்தின் படங்கள் ஒரேநாளில் ரிலீஸானதால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனாலும் வாரிசு, துணிவு இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கும் மேல் வசூலித்தன. இந்நிலையில் இந்தாண்டு அயலான், கேப்டன் மில்லர் படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகின.
அதாவது கடந்தாண்டு விஜய், அஜித் இடையேயான போட்டி போல, இந்தாண்டு தனுஷ், சிவகார்த்திகேயனின் படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கின. இதில் அயலான் தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் அயலான் திரைப்படம் கதை திருட்டு விவகாரத்திலும் சிக்கியுள்ளது. இதனிடையே கேப்டன் மில்லர் படத்தை விஜய் பார்த்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

GOAT படப்பிடிப்பின் போது கிடைத்த கேப்பில் கேப்டன் மில்லர் படம் பார்க்கச் சென்றுள்ளார் விஜய். தனுஷின் படங்களை விரும்பி பார்ப்பேன் என ஏற்கனவே விஜய் சில இடங்களில் கூறியுள்ளார். முக்கியமாக மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கிய நிகழ்ச்சியில் பேசும் போது, அசுரன் படத்தில் தனுஷ் பேசிய வசனத்தை விஜய் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கேப்டன் மில்லர் படம் பார்த்த விஜய் தனுஷ் உட்பட படக்குழுவினரை பாராட்டியுள்ளாராம்.
கேப்டன் மில்லர் பார்த்துவிட்டு GOAT ஷூட்டிங் ஸ்பாட் சென்ற விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனிடம் பேசியுள்ளார். அப்போது கேப்டன் மில்லர் பார்த்தேன் எனவும், படம் பயங்கரமா இருக்கு என்றும் பாராட்டியுள்ளார். மேலும், கேப்டன் மில்லரில் ஆக்ஷன் சீன்ஸ் எல்லாம் தாறுமாறு எனவும் திலீப் சுப்பராயனை ஸ்பெஷலாக வாழ்த்தியுள்ளார். விஜய்யின் GOAT படத்துக்கும் திலீப் சுப்பராயன் தான் ஸ்டண்ட் கோரியோகிராபி என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் மில்லர் படத்தை விஜய் பாராட்டியது குறித்து திலீப் சுப்பராயன் தான் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்களும் கேப்டன் மில்லர் படக்குழுவினரும் ரொம்பவே உற்சாகமாகியுள்ளனர். அதேநேரம் GOAT படத்திலும் தரமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். இந்தப் படத்திற்காக திலீப் சுப்பராயன் 100 நாட்களுக்கும் அதிகமாக கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











