Vijay: தொடரும் லியோ பாக்ஸ் ஆபிஸ் பஞ்சாயத்து... அம்மாவுடன் விஜய்... ட்ரெண்டாகும் க்யூட் போட்டோ!

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக அவர் நடிப்பில் வெளியான லியோ பாக்ஸ் ஆபிஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது.

லியோ படத்தால் தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கு லாபம் இல்லை எனவும் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 Vijay: Vijay with his mother in a Leo look photo is trending now

அம்மாவுடன் விஜய்யின் க்யூட் போட்டோ
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார் விஜய். நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய்க்கு, அவரது அம்மாவும் அப்பாவும் தான் பெரியளவில் சப்போர்ட் செய்தனர். அவர்கள் இருவரும் விஜய்யை வைத்து சொந்தமாக படம் எடுத்து, அவரை ஹீரோ மெட்டீரியலாக உருவாக்கினர். விஜய்யின் வெற்றியில் அவர்களது பங்கு மிக முக்கியமானது.

பூவே உனக்காக படத்தின் வெற்றிக்குப் பின்னர் ரூட்டு மாறிய விஜய், அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட்கள் கொடுத்து கோலிவுட்டின் மாஸ் ஹீரோவானார். இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் விஜய் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் ரிலீஸான லியோ, முதல் நாளில் சிறப்பான ஓபனிங் பெற்றது. அதேநேரம் நெகட்டிவான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் தடுமாறத் தொடங்கியது.

இதனிடையே ஒருவாரத்தில் 461 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக லியோ படக்குழு நேற்று அறிவித்தது. இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், தியேட்டர் உரிமையாளர்கள் திருப்தியடையவில்லை. லியோ படம் ரிலீஸ் செய்தது தங்களுக்கு நஷ்டம் என்றே புலம்பி வருகின்றனர். இதுபற்றி தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியமும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இப்படியாக லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து பல பஞ்சாயத்துகள் அரங்கேறி வருகின்றன. ஆனால் விஜய்யோ தளபதி 68 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். ஆயுத பூஜை தினத்தன்று தளபதி 68 பூஜை வீடியோ வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் அவரது அம்மாவுடன் இருக்கும் போட்டோவும் ட்ரெண்டாகி வருகிறது. இந்த போட்டோவில் விஜய் லியோ படத்தின் பார்த்திபன் லுக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 Vijay: Vijay with his mother in a Leo look photo is trending now

லியோ ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட இந்த போட்டோ தற்போது வெளியாகி விஜய் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. தளபதி 68 படத்தின் மேக்கப் டெஸ்ட்டுக்காக அமெரிக்கா சென்று திரும்பியதும், தனது அப்பாவை சந்தித்திருந்தார் விஜய். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ, அதற்கும் முன்பு எடுத்தது என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X