Vijay: பீஸ்ட் ஸ்பாட்டில் கெத்து காட்டிய விஜய்... ட்ரெண்டாகும் தளபதியின் தாறுமாறு வீடியோ!

சென்னை: விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

 Vijay: Vijays Beast Making video has been released and is trending

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் விஜய் ஆக்‌ஷன் சீனில் தாறுமாறாக கெத்து காட்டுவது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ட்ரெண்டாகும் பீஸ்ட் மேக்கிங் வீடியோ
விஜய்யின் 66வது படமாக உருவான பீஸ்ட் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி பீஸ்ட் படத்துக்கு முதல் நாளில் சூப்பரான ஓபனிங் கிடைத்தது. ஆனால், பீஸ்ட் வெளியான மறுநாளே கேஜிஎஃப் ரிலீஸானது. அதேபோல், பீஸ்ட் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன.

இதனால், அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பீஸ்ட் ரொம்பவே தடுமாறியது. அதேநேரம், இந்தப் படத்தின் பல காட்சிகளை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். இதையெல்லாம் கடந்து விஜய்யின் ஸ்டைலிஷான கெட்டப், ஆக்‌ஷன் சீன்ஸ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. பீஸ்ட் படம் குறித்து அதிகமான ட்ரோல்கள் வந்தாலும், விஜய் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படக்குழுவுக்கு விருந்து கொடுத்திருந்தார்.

அதன்பின்னர் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பீஸ்ட் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது. படம் முழுக்கவே ஷாப்பிங் மால் செட் போட்டு அதனுள்ளே தான் எடுக்கப்பட்டிருந்தது.

அதில் ஒரு ஆக்‌ஷன் சீன் முழுவதும் விஜய் ஸ்கேட்டிங் செய்தபடியே நடித்திருப்பார். அந்தக் காட்சிக்காக விஜய் ஸ்கேட்டிங் ப்ராக்டிஸ் செய்யும் வீடியோ தான் தற்போது வெளியாகியுள்ளது. இதில், முதன்முறையாக ஸ்கேட்டிங் ஆக்‌ஷன் சீனில் நடிக்கும் பயமே இல்லாமல் தாறுமாறாக கெத்து காட்டியுள்ளார் விஜய். ஸ்கேட்டிங்கில் கூட செம்ம ஸ்டைலிஷாக விஜய் பிராக்டிஸ் செய்ய, ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அவரை வியந்து பார்க்கின்றனர்.

விஜய் தாறுமாறு காட்டும் பீஸ்ட் படத்தின் மேக்கிங் வீடியோவை, ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனமே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X