Vijay: லியோ ரிலீஸுக்குப் பின் விஜய் எப்படி இருக்கார்..? ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் க்ளிக்!!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைத்தது.

ஆனால், அதனைத் தொடர்ந்து லியோவுக்கு நெகட்டிவான விமர்சனங்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் லியோ ரிலீஸான பின்னர் விஜய்யின் இரண்டு லேட்டஸ் போட்டோஸ் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
விஜய்யின் லேட்டஸ்ட் கிளிக்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, இந்த வாரம் 19ம் தேதி ரிலீஸானது. பான் இந்தியா மூவியாக வெளியான லியோவுக்கு அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம், இந்தப் படத்துக்கு ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களும் வெளியாகி லியோ படக்குழுவை அப்செட் ஆக்கியுள்ளது.
இதனால் லியோ டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக் அடிக்கடி ட்ரெண்டாகி வருகிறது. லியோ லோகேஷின் LCU கான்செப்ட்டில் உருவாகியிருந்தும், நெட்டிசன்கள் அதிகளவில் ட்ரோல் செய்து வருகின்றனர். லியோ ரிசல்ட்டை விஜய் எப்படி எடுத்துக்கொண்டார் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால், வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங்கிற்காக ரெடியாகிவிட்டார்.
இதற்காக தனது ஹேர்ஸ்டைலை விஜய் மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் லேட்டஸ் போட்டோஸ் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. அதில் ஒரு போட்டோவில் லியோ படத்தின் பார்த்திபன் கெட்டப்பில் இருக்கிறார். அவருடன் லியோ ஆர்ட் டைரக்டர் சதீஷ்குமார் தனது குடும்பத்துடன் உள்ளார். ஆர்ட் டைரக்டர் சதீஷ்குமாரின் மகளை விஜய் தனது கைகளில் தூக்கி வைத்துள்ளார். இந்த போட்டோவை சதீஷ்குமார் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
இதேபோல், இன்னொரு போட்டோவும் ட்ரெண்டாகி வருகிறது. அதில் நடிகர் அஜ்மல் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். அஞ்சாதே, கோ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அஜ்மல், தளபதி 68ல் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர் விஜய்யை நேரில் சந்தித்ததாகவும், அப்போது லியோ வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த போட்டோவில் விஜய்யின் லுக் இன்னும் செம்ம மாஸ்ஸாக உள்ளது.
லியோ ரிசல்ட் பற்றி அதிகம் கவலைப்படாத விஜய், அடுத்து வெங்கட் பிரபுவின் தளபதி 68 படத்தில் பிஸியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், சென்னையை தொடர்ந்து வெளிநாடுகளிலும் ஷூட்டிங் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











