Vijay: லியோ செகண்ட் சிங்கிள் அப்டேட்லாம் இருக்கட்டும்... விஜய் மாஸ் லுக் எப்படி இருக்குன்னு பாருங்க!
சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் நடித்துள்ள லியோ, அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் செகண்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் லியோ இசை வெளியீட்டு விழா எப்போது என்ற தேதியும் சீக்கிரமே அறிவிக்கப்படவுள்ளதாம்.
இந்நிலையில், லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட விஜய்யின் தெறிமாஸ் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய்யின் லியோ லுக்: கோலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் லியோ தான் முதல் இடத்தில் உள்ளது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதால், ரொம்பவே எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய் - லோகேஷ் கூட்டணி மாஸ்டர் படத்துக்குப் பிறகு லியோவில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு ஜனவரியில் தொடங்கிய லியோ, அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
கைதி, விக்ரம் படங்களைத் தொடர்ந்து, லியோவும் LCU கான்செப்ட்டில் உருவாகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர், சென்னை, விசாகப்பட்டினம் என லியோ படப்பிடிப்பை மொத்தமாக 125 நாட்களில் முடித்துவிட்ட லோகேஷ், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். இதனிடையே லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள், சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோரின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஆகியவை அடுத்தடுத்து வெளியானது.
இதனைத் தொடர்ந்து லியோ செகண்ட் சிங்கிள் அடுத்த வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. லியோ செகண்ட் சிங்கிள், இசை வெளியீட்டு விழா தேதி ஆகியவற்றை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கே சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக விஜய்யின் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

லியோ படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது காஷ்மீரில் எடுக்கப்பட்ட விஜய் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வந்தன. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் செம்ம ஸ்டைலிஷான ஹேர் ஸ்டைலில் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
அப்போது விஜய் ஒயிட் ஷர்ட் அணிந்தபடி கேஷுவலாக நின்று கொண்டிருக்கிறார். இந்த போட்டோவை நெட்டிசன்கள் இப்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் செம்ம மாஸாக போஸ் கொடுத்துள்ளது, அவரது ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. லியோ செகண்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகும் முன்னரே, விஜய்யின் போட்டோ வெளியாகி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











