Vijay: விஜய்யின் லியோ வைப் சீக்ரெட் இதுதான்... ட்ரெண்டாகும் தளபதியின் ஸ்டைலிஷ் போட்டோஸ்!!

சென்னை: விஜய்யின் லியோ கடந்த வாரம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் LCU-ன் கீழ் உருவாகியுள்ள லியோவுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்தப் படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 Vijay: Vijays Leo shooting spot photos are trending on Twitter

இந்நிலையில், லியோ ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் போட்டோஸ் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய்யின் லியோ வைப் போட்டோஸ்: விஜய் நடிப்பில் வெளியான லியோ இண்டஸ்ட்ரி ஹிட் படங்களின் வரிசையில் இடம்பிடிக்க உள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய் வசூலித்த லியோ, அடுத்தடுத்த நாட்களிலும் கலெக்‌ஷனில் மாஸ் காட்டி வருகிறது. அதன்படி, இந்தப் படம் இதுவரை 400 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 Vijay: Vijays Leo shooting spot photos are trending on Twitter

லியோ ஆடியோ லான்ச் கேன்சல் முதல் அதிகாலை 4 மணி FDFS வரை பல தடைகளை கடந்து லியோ வெளியானது. அதற்கான மிகப் பெரிய வெற்றியாக இப்போது வசூலில் சம்பவம் செய்து வருகிறது. அதேநேரம் லியோ மீதான நெகட்டிவான விமர்சனங்களும் அதிகளவில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், லியோ படத்தின் Behind the Scene போட்டோஸ் தற்போது வெளியாகி வருகின்றன.

லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. விஜய்யின் பார்த்திபன் கேரக்டர் போர்ஷன் முழுவதும் காஷ்மீரில் தான் எடுக்கப்பட்டன. இதற்காக தனது ஹேர் ஸ்டைலையும் வித்தியாசமாக மாற்றியிருந்தார் விஜய். மாஸ்டர் படத்துக்குப் பின்னர் லியோவில் விஜய்யின் லுக் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதே ஹேர்ஸ்டலில் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போட்டோஸ் ட்ரெண்டாகி வருகிறது.

 Vijay: Vijays Leo shooting spot photos are trending on Twitter

இந்த புகைப்படங்களில் விஜய்யும் லோகேஷ் கனகராஜ்ஜும் ஷூட்டிங் குறித்து டிஸ்கஸ் செய்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் ஜாலியாக சிரித்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. விஜய் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் இந்த போட்டோஸ் Random க்ளிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. லியோவுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், விஜய்யின் போட்டோஸ்ஸை படக்குழுவினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 Vijay: Vijays Leo shooting spot photos are trending on Twitter

ரசிகர்களிடம் லியோ வைப் குறையாமல் இருக்கவே விஜய்யின் புகைப்படங்கள் வெளியிடப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த போட்டோக்களை விஜய் ரசிகர்கள் ட்ரெண்டு செய்து ஃபயர் எமோஜி விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X