Vijay: என்னயா மனுஷன் இப்படி மெர்சல் பண்றாரே... Rugged Boy லுக்கில் விஜய்... தளபதி 69 வைப் லோடிங்!
சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் ரங்கட் பாய் லுக்கில் இருக்கும் போஸ்டர் ஒன்று டிவிட்டரில் செம்ம வைரலாகி வருகிறது. விஜய்யின் புதிய கெட்டப் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது.
மெர்சல் காட்டும் விஜய்யின் புதிய லுக்
கோலிவுட்டின் மாஸ் ஹீரோ, பாக்ஸ் ஆபிஸ் கிங் என மெர்சல் காட்டுகிறார் தளபதி விஜய். வாரிசு, லியோவை தொடர்ந்து தற்போது தளபதி 68ல் நடித்து வரும் விஜய், அடுத்தடுத்து மேலும் 2 படங்களுக்கும் ரெடியாகிவிட்டாராம். வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் தளபதி 68 முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தளபதி 68ல் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இது சயின்ஸ் பிக்ஷன் படம் இல்லை என்றும், விஜய் ரசிகர்களுக்கான பக்கா கமர்சியல் ஜானரில் இருக்கும் எனவும் அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தளபதி 68 ஷூட்டிங் முடியும் முன்பே விஜய்யின் அடுத்தப் படம் பற்றிய அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி விஜய்யின் தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டணி முதன்முறையாக இணையவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
அதேபோல் தளபதி 69 படத்தை ஃபேன் பாய் சம்பவம் போல இயக்கவுள்ளாராம் கார்த்திக் சுப்புராஜ். இதனால் விஜய்யின் லுக், கேரக்டர் என எல்லாமே தரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் தெறிக்க தெறிக்க ஆக்ஷனில் மிரட்டவுள்ளாராம் விஜய். இதனையடுத்து விஜய்யின் கேரக்டர், லுக் எப்படி இருக்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் தனது குழுவினருடன் டிஸ்கஸ் செய்து வருகிறாராம்.
இந்நிலையில், இந்த தகவல்களுக்கு ஹைப் கொடுக்கும் வகையில் விஜய்யின் மிரட்டலான போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ரக்கட் பாய் லுக்கில் விஜய் மாஸ் காட்டுகிறார். ஹேர் ஸ்டைல், டிரெஸ்ஸிங் என எல்லாமே தாறுமாறாக இருக்கிறது. முக்கியமாக ஒரு விஜய் என்றாலே மஜாவாக இருக்கும், ஆனால் இந்த போஸ்டரில் இரண்டு விஜய் இருப்பதும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ரசிகர்களிடம் வைரலாகி வரும் விஜய்யின் போஸ்டர் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஃபேன்மேட் போஸ்டர் என்பதும், தளபதி 69ல் விஜய்யின் லுக் இப்படி இருக்கலாம் என்ற கணிப்பில் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











