Vijay Vikram: வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன் மொமண்ட்... ட்ரெண்டாகும் விஜய், விக்ரம் த்ரோபேக் போட்டோ

சென்னை: கோலிவுட்டில் விஜய், விக்ரம் இருவருமே முன்னணி நாயகர்களாக வலம் வருகின்றனர். விஜய் மாஸ் காட்டினால், விக்ரம் வெரைட்டியாக நடித்து மிரள வைக்கிறார். இவர்கள் இருவரும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த நடிக்கவிருந்தனர். அது நடக்காமல் போன நிலையில், தற்போது விஜய்யும் விக்ரமும் எடுத்துக்கொண்ட த்ரோபேக் போட்டோ வைரலாகி வருகிறது.

ட்ரெண்டாகும் விஜய், விக்ரம் போட்டோ
தமிழ் சினிமாவில் 2கே கிட்ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கும் விஜய், விக்ரம் இருவருமே இதுவரை இணைந்து நடித்தது கிடையாது. விஜய் மாஸ் படங்களை மட்டுமே குறிவைத்து நடித்து வரும் நிலையில், விக்ரம் மாஸ் & க்ளாஸ் என வெரைட்டியாக நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 Vijay Vikram: Thalapathy Vijay and Chiyaan Vikram throwback photo is trending on Twitter

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாகின. முதல் பாகம் 2022 செப்டம்பர் மாதமும், இரண்டாம் பாகம் கடந்தாண்டும் வெளியாகின. லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் முதலீடுக்கு மோசம் இல்லாத வசூலை பெற்றது. இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்திருந்தார்.

முதல் பாகத்தில் விக்ரம் கேரக்டருக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும், இரண்டாம் பாகத்தில் வழக்கம் போல தனது நடிப்பில் மிரட்டியிருந்தார். அதேபோல் வந்தியத் தேவன் கேரக்டரில் கார்த்தியும், ராஜராஜசோழனாக ஜெயம் ரவியும் நடித்திருந்தனர். த்ரிஷா குந்தவை கேரக்டரிலும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்தனர். முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தை 2000த்தின் தொடக்கத்தில் இயக்க மணிரத்னம் முடிவு செய்திருந்தார்.

அதில், விஜய், டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, விக்ரம் மூவரும் நடிக்கவிருந்தனர். அதாவது ராஜராஜசோழன் கேரக்டரில் மகேஷ் பாபுவையும், ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரமையும் நடிக்க வைக்க மணிரத்னம் முடிவு செய்திருந்தார். வந்தியத்தேவன் பாத்திரத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. ஒருவேளை அப்போது பொன்னியின் செல்வன் உருவாகியிருந்தால், விஜய், விக்ரம் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.

ஆனால், அது நடக்காமல் போனதோடு, விஜய்யின் வந்தியத் தேவன் கேரக்டரில் கார்த்தி தற்போது நடித்திருந்தார். இந்நிலையில், விஜய், மகேஷ் பாபு, விக்ரம் கூட்டணியில் பொன்னியின் செல்வன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நேரம், விஜய்யும் விக்ரமும் ஒன்றாக போட்டோ எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை தற்போது வைரலாக்கி வரும் ரசிகர்கள், விஜய், விக்ரம் கூட்டணி இப்போதாவது இணையுமா என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X