Vijay Vishal: விஷயம் மார்க் ஆண்டனி டீசர் இல்லை... விஜய்யை விஷால் சந்தித்ததன் பின்னணி!

சென்னை: கோலிவுட்டில் இன்றைய பரபரப்பான சம்பவமே முன்னணி நடிகர்கள் விஜய் - விஷால் சந்திப்பு தான்.

விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

இந்த டீசரை விஜய்யை வைத்து வெளியிடவே விஷாலும் மார்க் ஆண்டனி படக்குழுவும் நேரில் சென்றதாக சொல்லப்படுகிறது.

ஆனால், விஷால் இன்னொரு திட்டத்துடன் இந்த சந்திப்பை அரங்கேற்றியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 Vijay Vishal: The reason for Vishal meeting Vijay with Mark Antony film teaser

விஜய் - விஷால் சந்திப்பின் பின்னணி:விஜய் தற்போது லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். லியோ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே இன்று காலை விஜய்யை நடிகர் விஷால் நேரில் சென்று சந்தித்தார்.

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி, கேங்ஸ்டர் ஜானரில் ரெட்ரோ ஸ்டைல் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. விஷாலுடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு மாஸ்ஸான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் டீசரை வெளியிடுவதற்காக தான் விஜய்யை விஷால் நேரில் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. மார்க் ஆண்டனி டீசரை பார்த்த விஜய் விஷாலையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனையும் பாராட்டியதாகவும் தெரிகிறது. விஷாலுக்கு கை கொடுக்கவே விஜய் மார்க் ஆண்டனி டீசரை வெளியிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் விஷால் இன்னொரு திட்டத்துடன் தான் விஜய்யை மீட் செய்துள்ளார் என கூறப்படுகிறது.

விஜய்யின் லியோ படத்தில் முதலில் விஷால் தான் வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. இதுகுறித்து விஷால் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் இருந்தபோது தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே விஷால் லியோ படத்தில் நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம் நல்ல சான்ஸை மிஸ் செய்துவிட்டதாகவும் விஷால் ஃபீல் செய்துள்ளாராம்.

 Vijay Vishal: The reason for Vishal meeting Vijay with Mark Antony film teaser

இந்த கவலையை போக்கும் விதமாக விரைவில் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க ஆர்வம் காட்டி வருகிறாராம் விஷால். துப்பறிவாளன் 2 திரைப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள விஷால், விஜய்க்காக இரண்டு கதைகளை தயார் செய்துள்ளாராம். இந்த கதைகள் விஜய்க்காக மட்டுமே என விஷால் உறுதியாக இருக்கிறாராம். அதனால் இன்றைய சந்திப்பில் அதுகுறித்தும் விஜய்யிடம் விஷால் பேசியதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், கடந்த சில தினங்களாகவே விஜய் அரசியலில் களமிறங்கலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. விஷாலும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டது முதல், அரசியலில் களமிறங்கவும் ஆர்வமாக உள்ளார். அதனால், விஜய் அரசியலில் இறங்கினால், கண்டிப்பாக நானும் அவருடன் இணைவேன் என்பதை மறைமுகமாக சொல்லவே இந்த சந்திப்பு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X