Vijay Vs Dhanush: விஜய்யுடன் மோதிப் பார்க்கும் தனுஷ்... லியோவுக்கு ஸ்கெட்ச் போட்ட கேப்டன் மில்லர்

சென்னை: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

ஆக்‌ஷன் ஜானரில் பீரியட் படமாக உருவாகும் கேப்டன் மில்லர் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

 Vijay Vs Dhanush: Dhanush’s Captain Miller film will be Released On OCT 2023

ஆனால், தீபாவளி ரேஸில் அயலான், ஜப்பான் படங்கள் களமிறங்குவதால் கேப்டன் மில்லர் அதற்கு முன்னதாகவே ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்

தனுஷின் வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. வாத்தி படப்பிடிப்பு முடிந்ததுமே கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாகிவிட்டார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

தனுஷுடன் பிரியங்கா மோகன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்தது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து ஜூலையில் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இதனிடையே கேப்டன் மில்லர் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இதனால் தனுஷ் ரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் தீபாவளி ரிலீஸை உறுதிசெய்துவிட்டது. அதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கார்த்தியின் ஜப்பான் படங்களும் அடுத்தடுத்து தீபாவளி ரிலீஸை கன்ஃபார்ம் செய்துவிட்டன.

அயலான், ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என இப்போதே தீபாவளி ரிலீஸ் களைக்கட்டத் தொடங்கிவிட்டது. அதனால், கேப்டன் மில்லர் படமும் தீபாவளிக்கு ரிலீஸானால் சிக்கல் தான், தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சினை இருக்கும் என தனுஷ் யோசித்து வருகிறாராம். எனவே கேப்டன் மில்லர் படத்தை தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்துவிடலாம் என பிளான் போட்டு வருகிறார்களாம்.

அதன்படி, அக்டோபர் மாதமே கேப்டன் மில்லர் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், விஜய்யின் லியோ அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இப்போது கேப்டன் மில்லரும் அக்டோபரில் ரிலீஸானால் பாக்ஸ் ஆபிஸில் விஜய் vs தனுஷ் மோதல் அனல் பறக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அக்டோபர் மாதத்தை விட்டால் கேப்டன் மில்லர் படத்தை இப்போதைக்கும் வெளியிட முடியாது எனத் தெரிகிறது.

 Vijay Vs Dhanush: Dhanush’s Captain Miller film will be Released On OCT 2023

அதனால், வேறு வழியே இல்லாமல் விஜய்யுடன் மோதிப் பார்க்க முடிவெடுத்துவிட்டாராம் தனுஷ். அக்டோபரில் விஜய்யின் லியோ, தனுஷின் கேப்டன் மில்லர், அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு அயலான், ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X