வா அண்ணே பார்த்துக்கலாம்.. நான் தொடங்கிட்டேன்.. விஜய்க்கு எதிராக களத்தில் குதித்த ஜூலி.. சூடு பிடிக்கும் களம்

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களமிறங்குகிறது. நேற்றுதான் அக்கட்சியின் 234 வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் களமிறங்குகிறார். தோல்வி பயம் காரணமாகத்தான் அவர் இரண்டு தொகுதிகளில் களமிறங்குவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதற்கிடையே இந்தத் தேர்தலில் விஜய்க்கு எதிராக தான் களமாடப்போவதாக அறிவித்திருந்தார் பிக்பாஸ் ஜூலி. அதன்படி செயல்படவும் தொடங்கிவிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை விஜய் தனித்து சந்திக்கிறார். அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என மொத்தம் இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். கட்சியின் முக்கிய தலைகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் சென்னைக்குள் போட்டியிடுகிறார்கள். தனித்து களமிறங்கினாலும் விஜய் இரண்டு தொகுதிகளில் கால் வைத்திருப்பது அவரது தோல்வி பயத்தை காட்டுவதாகவே கருதப்படுகிறது. ஒரு தொகுதி கைவிட்டாலும் இன்னொரு தொகுதியிலும் வென்றுவிடலாம் என்ற பிளான்தான் அது.

Vijay vs Julie Bigg Boss Julie Challenges Vijay Starts Campaign in Perambur Ahead of Elections
Photo Credit:

விஜய் vs ஜூலி: இதற்கிடையே விஜய்க்கு எதிராக காத்திரமான கருத்துக்களை முன்வைத்துவருகிறார் பிக்பாஸ் ஜூலி. அண்மையில் நடந்த தவெக நிர்வாகிகல் சந்திப்பு கூட்டத்தின்போது, ஜல்லிக்கட்டு காளையை மையப்படுத்தி ஒரு குட்டி ஸ்டோரியை சொன்னார். அந்த ஸ்டோரியை கேட்டுவிட்டு காண்டான ஜூலி; உடனடியாக அவரை விமர்சித்தும், கிண்டல் செய்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். உடனே தவெகவை சேர்ந்த விர்ச்சுவல் வாரியர்ஸ் ஜூலிக்கு எதிராக பதிவுகளை போட ஆரம்பித்தார்கள்.

Also Read
Leader: அறந்தாங்கி நிஷாவுக்கு விவஸ்தையே இல்லையா.. லீடர் இசை வெளியீட்டு விழாவில் திட்டிய VTV கணேஷ்
Leader: அறந்தாங்கி நிஷாவுக்கு விவஸ்தையே இல்லையா.. லீடர் இசை வெளியீட்டு விழாவில் திட்டிய VTV கணேஷ்

அடங்காத ஜூலி: அந்தப் பதிவுகளில் கிட்னி திருட்டில் ஜூலி ஈடுபட்டிருக்கிறார் என பேசினார்கள். அவர்க்ள் அப்படி செய்தது ஜூலியை மேற்கொண்டு ட்ரிகர் ஆக்கிவிட்டது. அதற்கும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இருப்பினும் தொடர்ந்து தரக்குறைவாகவே பேசிவந்தார்கள். இதனால் கடுப்பான ஜூலி சென்னை கமிஷனல் அலுவலகத்தில் புகாரும் கொடுத்தார். புகார் கொடுத்த கையோடு இன்னொரு வீடியோவையும் வெளியிட்டு விஜய்யையும், அவரது கட்சியினரையும் சரமாரியாக விமர்சனம் செய்திருந்தார். என்ன செய்தாலும் இப்படி பதிலடி கொடுக்கிறாரே என விழி பிதுங்கினார்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்.

விஜய்க்கு எதிராக: சூழல் இப்படி இருக்க கடைசியாக வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில், 'தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் பெண்களை எவ்வளவு தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள் என்பது உங்களுக்கு (விஜய்) தெரியாதா?. அதை ஏன் தட்டி கேட்கவில்லை. நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என சொல்லுங்கள். அந்தத் தொகுதிக்கு நேராக வந்து உங்களுக்கு எதிராக பரப்புரை செய்வேன். உங்கள் கட்சியினர் பெண்களுக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயலையும் மக்களிடம் வெளிச்சம் போட்டு காண்பிப்பேன்' என குறிப்பிட்டிருந்தார்.

வேலையை ஆரம்பித்த ஜூலி: அவர் அவ்வாறு வீடியோ போட்டதையும் தவெகவினர் கடுப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். விஜய்யோ இன்று பெரம்பூரிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிக்பாஸ் ஜூலி கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தபோது, 'போடுங்க ம்மா ஓட்டு.. உதய சூரியனை பார்த்து.. அண்ணே நீ (விஜய்) நாளைக்குதான் வருவதாக சொன்னாய். நான் இப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டேன். வா அண்ணே பார்த்துக்கலாம்' என ஒரே போடாக போட்டார். அது அங்கு கூடியிருந்தவர்களை உற்சாகம் அடைய செய்தது. இதை பார்த்த நெட்டிசன்களோ ஜூலி சொன்னபடியே செய்ய தொடங்கிவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X