விஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பிய எஸ்ஏசி... தீவிரமடைகிறதா தந்தை – மகன் உரசல்
சென்னை : நடிகர் விஜய்க்கும், அவரது தந்தையும் டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் பரவியது. இந்த விவகாரம் வெளிப்படையாக மீடியாக்களிலும் வெளியானது.
எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் விஜய் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்ய விண்ணப்பம் அளித்திருந்தார். இந்த விஷயம் தெரிந்ததும், தனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் விஜய்.
அத்துடன், தனது எழுத்துப்பூர்வமான ஒப்புதல் இல்லாமல் தனது பெயர் மற்றும் புகழை பயன்படுத்தக் கூடாது என கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் தன்னை ஒரு பிராண்டாக தனது தந்தை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன் எனவும் தெளிவாக கூறி இருந்தார்.

எஸ்ஏசி.,யை தவிர்க்கும் விஜய்
அதே சமயம், தந்தை - மகன் இடையே பேச்சுவார்த்தை கூட கிடையாது என்ற தகவலும் வெளியானது. விஜய் நீண்ட நாட்களாக தனது தந்தையின் போன் அழைப்புக்களை கூட ஏற்பதில்லை என கூறப்படுகிறது. தனது முடிவுகளில் தந்தை தலையிடுவதை விஜய் விரும்பவில்லை என்பது தான் இதற்கு காரணமாம்.

விஜய்க்காக தியாகம் செய்தேன்
இதற்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் தவறான வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார். விஜய்யை ஒரு நடிகராக உருவாக்குவதற்கும், அவரது நடிப்பு மற்றும் ரசிகர் மன்றத்தை கவனித்து கொள்வதற்காகவும் நான் தொழிலை தியாகம் செய்தேன் என்றார்.

இப்போதைக்கு கட்சியில்லை
தந்தை - மகன் விவகாரம் தொடர்ந்து பெரிதானதால் , தான் டைரக்ஷன் வேலைகளில் பிஸியாக இருப்பதால் கட்சியை பதிவு செய்யவில்லை என இந்திய தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினார் எஸ்ஏசி.

மகனின் மன்னிப்புக்காக காத்திருக்கிறேன்
தற்போது மகன் விஜய்க்கும் அவர் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் விஜய்யிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனது மன்னிப்பை மகன் ஏற்கும் வரை காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். என் மகன் என்னிடம் பேச வேண்டும் என்பதையே நான் எப்போதும் விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மகனை அறிமுகம் செய்யும் விஜய்
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தின் வேலைகளை விஜய் துவக்கி உள்ளார். அத்துடன் வெளிநாட்டில் சினிமா தொடர்பாக படிப்பை முடித்துள்ள தனது மகன் ஜாசன் சஞ்சய்யை சினிமாவில் அறிமுகம் செய்யும் முயற்சியிலும் விஜய் இறங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











