Vijay VS Udhayanidhi: "தளபதியின் லியோ வெற்றி பெற வாழ்த்து.." விஜய் ரசிகர்களை கூல் செய்த உதயநிதி!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் நாளை (அக்.19) முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லியோ FDFS ஷோவுக்கு அனுமதி கேட்டு படக்குழு சார்பில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விஜய்யின் லியோ வெற்றிபெற உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

 Vijay VS Udhayanidhi: Udhayanidhi Stalin wishes Thalapathy Vijays Leo Success

விஜய்யின் லியோ வெற்றிபெற உதயநிதி வாழ்த்து: தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ நாளை (அக்.19) திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள லியோவுக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் ஏற்கனவே தொடங்கிய நிலையில், அதிகாலை 4 மணி FDFS பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அதாவது லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு, காலை 9 மணிக்கு தான் முதல் ஷோ திரையிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனால், தமிழ்நாட்டிலும் அதிகாலை 4 மணி அல்லது 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டும் என படக்குழு நீதிமன்றத்தை நாடியது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இன்று தன் முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் கேன்சல் ஆனது. பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம் எனவும், அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை என்றும் லியோ டீம் தெரிவித்திருந்தது. 'அரசியல் அழுத்தம் இல்லை' என்ற வார்த்தை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், லியோ ட்ரெய்லரை பொது இடங்களில் ஸ்க்ரீனிங் செய்வதற்கும் அனுமதி கிடைக்காமல் போனது. இதற்கெல்லாம் விஜய்யின் அரசியல் ஆசை தான் காரணம் எனவும், திமுகவும் அமைச்சர் உதயநிதியும் இதனை விரும்பவில்லை என்றும் சொல்லப்பட்டது. தனது அரசியல் எதிர்காலத்துக்கு விஜய் போட்டியாக இருக்கக் கூடாது என உதயநிதி அவரை டார்கெட் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

 Vijay VS Udhayanidhi: Udhayanidhi Stalin wishes Thalapathy Vijays Leo Success

அதேநேரம், லியோ தியேட்டர் ரைட்ஸ் விவகாரத்திலும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்பட்டது. ஒட்டுமொத்தமாக விஜய் - உதயநிதி இடையே இப்போதே அரசியல் மோதல் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இதுபோன்ற சர்ச்சைகளுக்கெல்லாம் சிம்பிளாக ஃபுல்ஸ்டாப் வைத்துள்ளார் உதயநிதி. ஒரே டிவீட்டில் விஜய் ரசிகர்களையும் கூலாக டீல் செய்துள்ளார் அவர்.

"தளபதி விஜய் அண்ணாவின் லியோ, லோகேஷின் தரமான மேக்கிங்கில் உருவாகியுள்ளது" என அனிருத், அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆகியோரை டேக் செய்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார் உதயநிதி. "All the best team !" என லியோ படக்குழுவினருக்கு உதயநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், லியோவுக்கு உதயநிதி தரப்பில் இருந்து எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X