Vijay: விஜய்க்கு CM ஆகணும்னு ஆசை எப்போது வந்தது தெரியுமா? நண்பரே சொல்லிட்டாரே.. மாஸ்டர் பிளான் தான்

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் , தொண்டர்கள் என பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருப்பது மே 4ஆம் தேதிக்குத்தான். அன்றைய தினத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் முதன் முதலாக விஜய் மற்றும் அவரது கட்சியினர் முதல் முறையாக தேர்தலைச் சந்தித்துள்ளனர். இப்படி இருக்கையில் நடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது என்பது குறித்து அவரது நண்பரும் நடிகருமான தாமு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் துப்பாக்கி படத்திற்கு பின்னர் மிகவும் கவனமாகவே அரசியல் கதைக் களங்களைத் தேர்வு செய்து நடித்து வந்தார். அதற்கு முன்னர் தமிழன் போன்ற படத்தில் நடித்திருந்தாலும், துப்பாக்கி படத்திற்கு பின்னர் விஜய்யின் கதை தேர்வுகள் அரசுகளை நோக்கி கேள்வி கேட்பது போலவே பெரும்பாலும் இருந்தது.

Actor Thamu reveals Vijay had CM ambitions years ago during early films highlighting his social service mindset and political vision long before entering Tamil Nadu politics with TVK party

விஜய்: இப்படி இருக்கையில் நடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணமும் அரசியலில் களமிறங்க வேண்டும் என்ற எண்ணமும் இந்த படங்களைத் தேர்வு செய்த பின்னர், அவருக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள், தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய ஜாம்பவான்களான முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தான் இவருக்கு அரசியல் எண்ணம் எழுந்தது என்று சிலர் கூறி வந்தனர். மேலும் சிலரோ புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் இணைந்த பின்னர் தான் இது போல எண்ணம் வந்துள்ளது என்றும் தெரிவித்து வந்தனர். ஆனால் நடிகர் தாமு சொல்லும் தகவலைப் பார்க்கையில் விஜய்க்கு அரசியல் எண்ணமும் முதலமைச்சர் கனவும் பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுந்து விட்டது என்பது தெரியவந்துள்ளது.

CM கனவு: இது தொடர்பாக நடிகர் தாமு கூறுகையில், " நாளைய தீர்ப்பு படத்தின் போதே சமூக பொறுப்புகள் குறித்து விஜய் அதிகம் பேசுவார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நாளில் பெண்களுக்கு அரிசி,சர்க்கரை மற்றும் மளிகை பொருட்கள் எல்லாம் கொடுத்தார். நற்பணிகளை அவர் அப்போதே தொடங்கிவிட்டார். அப்போதே தனக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்று எங்களிடம் கூறியுள்ளார். அதனால் தான் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி உதவிகள் செய்து வந்தார்" என்று தெரிவித்துள்ளார். நடிகர் தாமுவின் இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X