»   »  தெறி 2 டைட்டிலுக்கு ஆசைப்படும் விஜய்... ஓகே சொல்வாரா தாணு?

தெறி 2 டைட்டிலுக்கு ஆசைப்படும் விஜய்... ஓகே சொல்வாரா தாணு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்றோ நாளையோ கேரளா ஹவுஸில் பூஜையுடன் தொடங்கவிருக்கிறது. இந்தப் படத்துக்கு 'தெறி 2' என்று டைட்டில் வைக்கப்படலாம் என்கிறார்கள்.

Vijay wants to title Theri 2 for his next

பைரவா விமர்சன ரீதியாக தோல்விப் படம் என்றாலும் கூட பொங்கலுக்கு வேறு படங்கள் வராததால் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லையாம். இதனாலேயே என்னவோ பைரவாவில் பணிபுரிந்த அனைத்து டெக்னிஷியன்களுக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் விருந்து கொடுத்ததோடு ஆளுக்கொரு தங்கச் செயினையும் பரிசாக வழங்கியிருக்கிறார் விஜய். 2பவுன் எடையுள்ள செயின் என்கிறது விஜய் வட்டாரம்.

Vijay wants to title Theri 2 for his next

அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்கு தெறி 2 என்று பெயரிடப்படலாம் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு இதே அட்லீ இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தெறி. அதனால் அந்த டைட்டிலை செலக்ட் செய்திருக்கிறார் விஜய். தாணுவிடம் கேட்கவிருக்கிறார்கள். தாணுவின் தாராள மனப்பான்மை அனைவருக்கும் தெரிந்ததே என்பதால் படத்தை இப்போதே தெறி 2 என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

English summary
Actor Vijay and his 61st movie crew are wants to title their project as Theri 2 and seeking permission from Kalaipuli Thaanu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil