GOAT - விஜய்யை செமயாக மெர்சல் செய்த வெங்கட் பிரபு?.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக "லியோ" திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது.
விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் "கஸ்டடி" ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.
விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொகேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி நடந்துவருகிறது.
மெர்சல் செய்த வெங்கட் பிரபு: இந்நிலையில் கோட் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது மும்முரமாக ஷூட்டிங் நடந்து வந்த சூழைல் விஜய் சில நாட்கள் பிரேக் எடுத்தாராம். அப்போது வெங்கட் பிரபுவிடம் அவர், இந்த இடைபட்ட கேப்பில் மற்றவர்களை வைத்து படம் எடுக்கும்படி அறிவுறுத்தினாராம். அதனை கேட்டு மற்ற ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து ஷூட்டிங்கை முடித்தாராம். அதனைத் தொடர்ந்து விஜய் இன்னும் சில நாட்கள் பிரேக் கேட்டுவிட்டு, யோகிபாபுவை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்துவிடுங்களேன் என்று கூறினாராம்.
அதற்கு வெங்கட் பிரபுவோ அவரது காட்சிகளையும் எடுத்து முடித்துவிட்டோம் என்று சொன்னாராம். இதை பார்த்த விஜய் இவ்வளவு ஸ்பீடா என்று கேட்டு வெங்கட் பிரபுவை பாராட்டிதள்ளிவிட்டாராம். முன்னதாக இந்தப் படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று வெங்கட் பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றி கழகம்: இதற்கிடையே விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் என்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அநேகமாக அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி, அட்லீ ஆகிய மூன்று பேரில் ஒருவர் இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











