ஜோடி விஜய் பண்ண வேண்டிய படம்... என்ன நடந்தது விவரிக்கும் இயக்குனர் பிரவீன் காந்தி!
சென்னை: ராட்சசன்,ஜோடி,ஸ்டார் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் பிரவீன் காந்தி
எப்போதும் அட்வான்ஸாக யோசிக்கும் பிரவீன் காந்தி தன்னுடைய படங்களிலும் அந்த மேஜிக்கை நிகழ்த்தி வந்தார்
இந்த நிலையில் ஜோடி படத்தில் முதலில் நடிகர் விஜய் தான் நடிக்க இருந்ததாகவும் பின் என்ன நடந்தது குறித்து பிரவீன் காந்தி விவரித்துள்ளார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில்
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் உள்ளவர் பிரவீன் காந்தி. 1999 ஆம் ஆண்டு வெளியான ரட்சகன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரவீன் காந்திக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. நாகார்ஜுனா சுஷ்மிதா சென் என இந்திய அளவில் நடிகர்களை தேர்ந்தெடுத்து இதில் நடிக்க வைத்தார். மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் புதிய டெக்னாலஜி பயன்படுத்தி எடுக்கப்பட்டதால் ரசிகர்களுக்கு இந்த படம் புது அனுபவத்தை கொடுத்ததோடு மாபெரும் வெற்றியையும் பெற்றுத் தந்தது. மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

பாடல்களுக்காகவே கதை
முதல் படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது படத்தை தொடங்குவதற்கு முன் இந்தியில் சிம்ரன் அறிமுகமான பாடலை தமிழில் உருவாக்க பிளான் செய்திருந்த பிரவீன் அது காரணமாக இசை புயல் ஏ ஆர் ரஹ்மானை சந்தித்து பேசியபோது வெறும் பாடல்களாக மட்டும் எடுக்காமல். அந்த பாடல்களுக்காகவே கதை ஒன்றையும் தயார் செய்துள்ளேன் என்றார்.

வித்தியாசமான முயற்சியில்
ஏ ஆர் ரஹ்மானும் அதற்கு ஓகே என கூறியுள்ளார். சினிமாவில் மிக அரிதாகவே காணப்படும் இது போன்ற வித்தியாசமான முயற்சியில் பிரவீன் காந்தி இறங்கி இந்தியில் வெளியான ஐந்து பாடல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைதான் தான் ஜோடி. பிரசாந்த் சிம்ரன் இந்த படத்தில் லீட் ரோலில் நடிக்க நாசர், விஜயகுமார்,ஜனகராஜ், ரமேஷ்கண்ணா, அம்பிகா, ஸ்ரீவித்யா என பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

பெற்றோரை இம்ப்ரஸ் செய்து
காதலர்கள் இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள புது முயற்சியாக ஒருவரின் பெற்றோரை மற்றொருவர் சந்தித்து அவர்களை இம்ப்ரஸ் செய்து பின் பெற்றோர்களின் ஆசிர்வாதத்தில் இரு குடும்பமும் சேர்கின்றவாறு அட்டகாசமான கதையை அமைத்திருப்பார் பிரவீன் காந்தி.

விஜய் நடிக்க முடியாமல் போனது
1999ல் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்தியில் பட்டையை கிளப்பிய பாடல்கள் தமிழிலும் அடி தூள் கிளப்பியது. இந்த நிலையில் ஜோடி படத்தில் பிரசாந்த் நடிப்பதற்கு முன்பாக இக்கதையில் முதலில் நடிகர் விஜய் தான் நடிக்க இருந்தாராம் பின் கால்சீட் காரணமாக இப்படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது அதனால் பிரசாந்த் நடித்துள்ளார். அதேபோல சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க இருந்தாராம் அவருக்கும் கால்ஷீட் பிரச்சினை இருந்ததால் படத்திலிருந்து நடிக்காமல் போனதுபின் சிம்ரன் ஒப்பந்தமானார் என பிரவீன் காந்தி ஜோடி படத்தில் நடந்த முக்கிய மாற்றத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











