Sanjay Dutt - என்ன சஞ்சய் தத் இப்படி இருக்காரு.. லியோ படத்தில் நடந்த சம்பவம் - விஜய் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சென்னை: sanjay Dutt (சஞ்சய் தத்) லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சய் தத்தை பார்த்து விஜய் ஆச்சரியப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆதித்யாராம் ஸ்டூடியோவில் படத்துக்கான செட் போடப்பட்டிருக்கிறது என்றும், அங்கு சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒரு பாடலுக்கு 2000 டான்ஸர்களை பயன்படுத்த லோகேஷ் கனகராஜ் திட்டம் தீட்டி அதற்கான பணிகளில் இறங்கியிருக்கிறார்.

 Vijay was surprised to see Sanjay Dutt at the Leo shooting spot.

லியோ கதை:

லியோ படத்தின் கதை குறித்து ஏகப்பட்ட தகவல்கள் உலாவுகின்றன. அதாவது, விஜய் ஒரு சம்பவத்தை செய்துவிட்டு தனது அடையாளங்களை மறைத்து காஷ்மீரில் வசித்து வருவார் அவரைத் தேடி மிகப்பெரிய கேங் ஒன்று வரும் அதையடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் கதை என கூறப்பட்டது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பாட்ஷா படத்தின் லைன் போல் இருக்கிறதே என கமெண்ட்ஸ் செய்தனர். இருப்பினும், லோகேஷ் கனகராஜ் சொதப்பமாட்டார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

அர்ஜுன் கேரக்டர் என்ன?:

இதற்கிடையே அர்ஜுன் படத்தில் நடிப்பதால் அவருக்கு என்ன மாதிரியான கேரக்டர் என்பது குறித்த கேள்வி எழுந்தது. முதலில், விஜய்க்கு நண்பனாக இருந்து துரோகியாக மாறுவார் என சொல்லப்பட்ட சூழலில், படத்தில் விஜய்க்கு அண்ணணாக அர்ஜுன் நடிக்கிறார் என லேட்டஸ்ட்டாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் நடந்த சண்டைக் காட்சி படப்பிடிப்பில் விஜய்யும், அர்ஜுனும் கலந்துகொண்டனர். அப்போது இருவருமே இளமையான கெட்டப்புகளில் இருந்தனர் என்றும் தகவல் வெளியானது.

தந்தையாக சஞ்சய் தத்:

லியோவில் ஏகப்பட்ட பேர் நடித்திருக்கின்றனர். எனவே அவர்களுக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸை லோகேஷ் எப்படி கொடுத்திருப்பார் என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்திருக்கிறது. முக்கியமாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதால் அவருக்கு என்ன ரோல் என பேசப்பட்ட சூழலில், படத்தில் விஜய்க்கு அவர் தந்தையாக நடிக்கிறார். அவரும் ஒரு கேங்ஸ்டர்தான் என்ற முணுமுணுப்பும் கடந்த வாரத்தில் கேட்டது.

 Vijay was surprised to see Sanjay Dutt at the Leo shooting spot.

சஞ்சய் தத்தின் சிறப்பான செயல்:

இந்நிலையில் லியோ படத்தின் ஷூட்டிங்கில் தனக்கான போர்ஷன் முடிந்தாலும் சஞ்சய் தத் கேரவனுக்கு செல்வதில்லையாம். மாறாக அனைவருடனும் சகஜமாக பழகிவருகிறாராம். அதுமட்டுமின்றி சாப்பிடும்போதுகூட அனைவரிடமும் சென்று ஏன் தனியாக சாப்பிட வேண்டும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாமே என கூறிவருகிறாராம். கிட்டத்தட்ட ஒரு புதுமுக நடிகர் போல் அவ்வளவு பக்குவமாக, பண்பாக இருக்கிறாராம்.

ஆச்சரியப்பட்ட விஜய்:

பொதுவாக பாலிவுட்டிலிருந்து நடிக்க வருபவர்கள் இங்கிருப்பவர்களிடம் அவ்வளவு எளிதாக பழக மாட்டார்கள். தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொள்வார்கள். நடித்துக்கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால் சஞ்சய் தத் முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறாரே என விஜய் ரொம்பவே ஆச்சரியப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X