Jailer: காக்கா vs கழுகு சண்டையெல்லாம் இல்லைங்க.. ஜெயிலருக்கு விஜய்யிடம் இருந்து வந்த வாழ்த்து!
சென்னை: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூலை 28ம் தேதி நடந்ததில் இருந்தே அதில் ரஜினிகாந்த் பேசிய பேச்சை வைத்து ரஜினிகாந்த் விஜய்க்குத் தான் பதிலடி கொடுத்திருக்கிறார் என ஏகப்பட்ட சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் வெடித்தன.
ஆனால், தான் எப்போதுமே சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டது கிடையாது என்றும் ரஜினிகாந்த் தான் தனக்கும் தலைவர் என்கிற நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என மீண்டும் தளபதி விஜய் நிரூபித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயிலர் படத்துக்கு நடிகர் விஜய்யிடம் இருந்தே வாழ்த்து வந்திருப்பதாக வெளியான தகவல்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களை நிச்சயம் சண்டை போடாமல் ஜெயிலர் படத்தை கொண்டாட உதவும் விதமாக அமைந்துள்ளது.
ஜெயிலர் படத்துக்கு விஜய்யிடம் இருந்து வந்த வாழ்த்து: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாகவே ஜெயிலர் படத்தின் ஹுகும் மற்றும் ஜுஜுபி பாடல்கள் வெளியாக நடிகர் விஜய்க்குத்தான் ரஜினிகாந்த் தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார் என சோஷியல் மீடியாவில் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆரம்பித்து வைத்த சண்டை மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தன.
பதிலுக்கு விஜய் ரசிகர்களும் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் ரொம்பவே கேவலமான சண்டையை போட ஆரம்பித்தனர். இந்நிலையில், ஜெயிலர் படத்துக்கு தளபதி விஜய்யிடம் இருந்து சூப்பரான வாழ்த்து வந்திருப்பதாக செய்யாறு பாலு ஓபன் செய்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
கலக்கிட்ட நெல்சா: கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி உள்ளார்.

ரஜினிகாந்துக்கு இந்த கதையை சொல்லுங்க என ஜெயிலர் படத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதே விஜய் தான் என நெல்சன் கூறியுள்ள நிலையில், ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் டிரெய்லரை பார்த்து விட்டு கலக்கிட்ட நெல்சா செம சூப்பரா இருக்கு என விஜய் பாராட்டி உள்ளார் என செய்யாறு பாலு ரகசிய தகவலை லீக் செய்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜும் பாராட்டு: லியோ படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜும் ஜெயிலர் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் நெல்சன் வாழ்த்துக்கள் என பாராட்டி உள்ளாராம்.
ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு எப்படியொரு பாக்ஸ் ஆபிஸ் படமாக இருக்கப் போகிறதோ அதே போலத்தான் அக்டோபர் மாதம் லியோ படமும் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டை படமாக இருக்கப் போகிறது. இதில், ரசிகர்கள் ஏன் தேவையில்லாமல் சண்டை போடுகின்றனர் என்று தான் தெரியவில்லை என நியூட்ரல் ஆடியன்ஸ் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications