வேட்டையன் படத்தை பார்த்தாரா விஜய்?.. தேவி தியேட்டரில் தெரிந்த தலை.. எப்பவுமே தலைவர் ஃபேன் தான்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியான வேட்டையன் படத்தை முதல் ஷோவே தளபதி விஜய் தேவி தியேட்டருக்கு சென்று பார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய் எப்போதுமே தனது முகத்தை மறைத்துக் கொண்டு ரசிகர்களுடன் ரசிகர்களாக தியேட்டருக்கு சென்று படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

vettaiyan vijay rajinikanth

சமீபத்தில் ஹைதராபாத்தில் பிரபாஸ் படத்தை தளபதி விஜய் பார்த்தது குறித்து கோட் படத்தில் அவருடன் நடித்த நடிகர் வைபவ் வெளிப்படையாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் கொண்டாடும் வேட்டையன்: ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் படத்தை காலையில் இருந்தே சினிமா பிரபலங்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். தனுஷ், சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் என பல பிரபலங்கள் வேட்டையன் படத்தை பாராட்டி ட்வீட் போட்டு வருகின்றனர்.

வேட்டையன் பார்த்த விஜய்?: சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து, காக்கா - கழுகு பிரச்சனை என ரஜினிகாந்துக்கும் விஜய்க்கும் இடையே ரசிகர்கள் சண்டை மூட்டி விட்டாலும், தான் எப்போதுமே தலைவர் ஃபேன் என்பதை உணர்த்தி வரும் நடிகர் விஜய் சமீபத்தில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் என்பது சந்தோஷத்தை அளிக்கிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், நடிகர் விஜய் தேவி தியேட்டரில் வேட்டையன் படத்தை பார்த்ததாக சில மீடியாக்கள் வீடியோவை வெளியிட்டுள்ளன. சோஷியல் மீடியாவிலும் அந்த வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

ரகசியமாக பார்த்திருப்பார்: ஹைதராபாத்தில் பார்த்தது போல ரசிகர்களுடன் நிச்சயமாக விஜய் சென்னையில் பார்க்க வாய்ப்பே இல்லை என்றும் தனியாக ஒரு இடத்தில் இருந்து படத்தை ரகசியமாகத்தான் பார்த்திருப்பார் என்றும் ரசிகர்கள் கண்டு பிடித்திருந்தால் மிகப்பெரிய கூட்டம் கூடியிருக்கும் என்றும் கூறுகின்றனர்.

பழைய வீடியோ: விஜய் ரசிகர்கள் சிலர் வேட்டையன் படத்தை விஜய் பார்க்கவே இல்லை என்றும் இது பழைய வீடியோ என்றும் சோஷியல் மீடியாவில் கமெண்ட் போட்டு வருகின்றனர். அதெல்லாம் கிடையாது விஜய் தேவி தியேட்டரில் படம் பார்த்தார் என்றும் கூறி வருகின்றனர். விரைவில் இது தொடர்பான உண்மை வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெகட்டிவ் விமர்சனம்: நடிகர் விஜய் தியேட்டரில் வேட்டையன் படத்தை பார்க்கிறார். ஆனால், ஆன்லைனில் விஜய் ரசிகர்கள் அதிகளவில் காலையில் இருந்தே நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருகின்றனர் என்றும் கோட் திரைப்படம் சொதப்பியது போல வேட்டையன் சொதப்பாத நிலையில், விஜய் ரசிகர்கள் வயிற்றெரிச்சலில் இருப்பதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் கூற சோஷியல் மீடியாவில் ட்விட்டர் சண்டை வெடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X