கரூர் சம்பவம் : 7 மணி நேரம் விசாரணை.. விஜய் செய்த முரட்டு சம்பவம்.. டெல்லியே அதிர்ந்தது!
சென்னை: கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணைக்காக டெல்லி சிபிஜ அலுவலகம் சென்ற விஜயிடம், சிபிஜ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து வெளியே வந்த விஜய், காரில் ஏறியபடி அங்கு கூடி இருந்த ரசிகர்களுக்கு கையை அசைத்தபடி சென்றார்.

கரூர் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஜனவரி 12ஆம் தேதி ஆஜரானார். அதைத்தொடர்ந்து, ஜனவரி 19ந்தேதி ஆஜராகி ஆறு மணி நேரத்திற்கும் மேல் பதில் அளித்தார்.
மாஸ் காட்டிய விஜய்: அதைத்தொடர்ந்து, மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும் படி கடந்த வாரம் டெல்லி சிபிஐ அலுவலகம் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து நேற்றே தனிவிமானத்தின் மூலம் டெல்லி சென்றார். இதையடுத்து இன்று காலை 11 மணி அளவில் சிபிஐ அலுவலகம் சென்ற விஜயிடம் கூட்ட நெரிசல் தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட்டன. கிட்டத்தட்ட 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய், தனது வாகனத்தில் ஏறி அங்கு கூடி இருந்த மக்களுக்கு கைகளை அசைத்தபடி சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். தற்போது இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











