அடேங்கப்பா, விஜய் லேசா கையசைத்ததற்கே இப்படியா?: வைரல் வீடியோ #Thalapathy63
Recommended Video

சென்னை: தளபதி 63 படப்பிடிப்பு தளத்திற்கு வந்த விஜய் காரில் இருந்து கையசைக்க ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த வீடியோ வெளியாகியுள்ளன.
சர்கார் படத்தை அடுத்து விஜய் அட்லியின் இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு கடந்த 21ம் தேதி துவங்கியது. முதலில் சில சண்டை காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.
படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்ஸில் நடந்து வருகிறது.
ரசிகர்கள்
தளபதி 63 படப்பிடிப்பு குறித்து அறிந்த ரசிகர்கள் விஜய்யை பார்க்கும் ஆவலில் பின்னி மில்ஸ் பகுதிக்கு வந்தனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விஜய்க்காக காத்திருந்தனர். அங்கு காரில் வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையசைக்க அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
விஜய்
விஜய்யை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் விசில் அடித்து தளபதி என்று கத்தியபோது எடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தளபதி
படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ரசிகர்கள் கூடியிருந்தது குறித்து அறிந்த விஜய் அங்கு வந்து அவர்களை பார்த்து கையசைத்த மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது.

நயன்தாரா
தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











