வாரிசு படத்தில் விஜய் பயன்படுத்திய காஸ்ட்லி வாட்ச்.. அதன் விலை மட்டும் இத்தனை லட்சமா?

சென்னை: வாரிசு படத்தில் நடிகர் விஜய் மிகப்பெரிய கோடீஸ்வரராக நடித்துள்ளார். அவர் கையில் சாதாரண வாட்ச் இருந்தால் நல்லா இருக்குமா? என்ன?

அதற்காக பிரத்யேகமாக காஸ்ட்லி வாட்ச் ஒன்றை விஜய் தனது கையில் கட்டி நடித்துள்ளார். தீபாவளி பரிசாக வெளியான அந்த அதிரடியான போஸ்டரில் ரசிகர்கள் கண்களை கவர்ந்த அந்த வாட்ச்சை ரசிகர்கள் ஜூம் அடித்துப் பார்த்து அதன் பெயர் என்ன? அதன் விலை என்ன? என்பதை எல்லாம் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

விஜய் கையில் இருக்கும் அந்த வாட்ச்சின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து இங்கே லேசாக பார்ப்போம் வாருங்கள்..

பர்ஃபெக்‌ஷன் முக்கியம்

பர்ஃபெக்‌ஷன் முக்கியம்

கோடீஸ்வரர் கதாபாத்திரம் என்று சொல்லிவிட்டு சாதாரண கூலிங் கிளாஸையோ, வாட்ச் உள்ளிட்ட பொருட்களையோ அணிந்து கொண்டு நடித்தால் டிராமா மாதிரி தான் இருக்குமே தவிர ரியாலிட்டிக்கு அருகே செல்லும் சினிமாவாக ஒரு போதும் இருக்காது. கமல் உள்ளிட்ட சில நடிகர்கள் ரியல் துப்பாக்கியை தான் சூட்டிங்கிற்கே பயன்படுத்துவர்கள் இந்நிலையில், வாரிசு படத்திலும் விஜய் அந்த பர்ஃபெக்‌ஷனை பக்காவாக செய்துள்ளார்.

செம ராயல்

செம ராயல்


கோட் சூட் உடை தொடங்கி விஜய் வாரிசு படத்தில் அணிந்துள்ள அத்தனை உடைகளும் செம காஸ்ட்லியாகவும் ராயலகாவும் உள்ளன. சமீபத்தில் வெளியான ஸ்டில்களை பார்த்து விட்டு இதே போல டிரெஸ் எடுக்க வேண்டும் என தேடி அலைந்த ரசிகர்களுக்கு சில உடைகள் கிடைக்காமல் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

காஸ்ட்லி வாட்ச்

காஸ்ட்லி வாட்ச்

இந்நிலையில், விஜய்யின் கையில் கட்டியிருக்கும் வாட்ச் ரோலக்ஸ் வாட்ச்சா என யோசித்து ரசிகர்கள் ஜூம் அடித்து பார்த்த நிலையில், செம காஸ்ட்லியான வாட்ச் அது என்பது தெரிய வந்திருக்கிறது. Patek Philippe Nautilus என்கிற காஸ்ட்லியான வாட்ச்சை தான் நடிகர் விஜய் வாரிசு படத்தில் அணிந்து நடித்துள்ளார்.

விலை எவ்வளவு

விலை எவ்வளவு

லட்சங்களை கடந்து சுமார் ஒரு கோடிக்கே அருகே இதன் விலை கூறப்படுகிறது. அதிகபட்சமாக 90 லட்சம் ரூபாய்க்கு இந்த காஸ்ட்லி வாட்ச் கிடைக்கிறது என வலைதளங்களில் தகவல்கள் உள்ளன. மேலும், இந்த கடிகாரம் அவ்வளவு எளிதில் எல்லோராலும் வாங்க முடியாது என்றும் சிலருக்கு 10 ஆண்டுகள் கூட ஆகிவிடும் இந்த கடிகாரம் கிடைக்க என்றும் கூறுகின்றனர். ரோஸ் கோல்ட் மற்றும் ஒயிட் கோல்டுகளால் இந்த கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

பொங்கல் போட்டி

பொங்கல் போட்டி

வரும் பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு என இரு பெரும் படங்கள் மோதி பார்த்து விட முடிவு செய்துள்ள நிலையில், எந்த படம் அதிக தியேட்டர்களை பிடிக்கும் என்றும் எந்த படம் முதலில் வெளியாகும் என்றும் கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் கிளம்பி உள்ளன. இரு படங்களுக்கும் பெரும் வசூல் குவியுமா? அல்லது ஒரு படம் அடிவாங்குமா? என ஏகப்பட்ட கணிப்புகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X