கீர்த்தி சுரேஷ் திருமணம்.. திரிஷாவுடன் தனி விமானத்தில் சென்றாரா விஜய்?.. வெளியான ஆதாரம்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். சில மாதங்களுக்கு முன்பு விக்கிரவாண்டியில் அந்தக் கட்சியின் முதல் மாநில மாநாடு நடந்தது. அதில் திமுகதான் தமிழ்நாட்டில் தனது அரசியல் எதிரி என்று பிரகடனப்படுத்தினார். அதேபோல் சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிலும் அதே டோனில்தான் பேசினார். சூழல் இப்படி இருக்க நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு திரிஷாவுடன் தனி விமானத்தில் விஜய் சென்றதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவார் என்று கடந்த சில வருடங்களாகவே கூறப்பட்டது. அந்தப் பேச்சை உண்மையாக்கும் விதத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் அவர். கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வந்ததிலிருந்தே அவருக்கு எதிராக விமர்சனங்களும் வர தொடங்கின. முக்கியமாக கட்சி பெயரில் எழுத்து பிழை இருப்பதாக முதல் விமர்சனம் வந்தது. அதற்கு பிறகு கட்சியின் பெயரில் உள்ள எழுத்து பிழை சரி செய்யப்பட்டது.

லீவு விட்ட விஜய்?: அதேபோல் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தவெக போட்டியிடவில்லை. மாறாக 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை கவனித்த பலர்; கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்கள் விடுமுறை விட்டது விஜய் மட்டும்தான் என்று அடுத்த விமர்சனம் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் விஜய் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதேசமயம் கட்சி ஆரம்பித்ததுமே எதிர் தரப்பினர் இப்படி பதற்றமடைவதை பார்க்கும்போதே விஜய்யை பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள் என்று விஜய்யின் தொண்டர்களாகிய ரசிகர்கள் பேசினார்கள்.
மாநாடு முதல் புத்தக வெளியீட்டு விழா: சூழல் இப்படி இருக்க விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய விஜய் திமுகதான் தமிழ்நாட்டில் தங்களது அரசியல் எதிரி என்று ஓபனாக பேசி கடுமையாக விமர்சனம் செய்தார். அதனையடுத்து சமீபத்தில், எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு; அங்கேயும் திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்தார். முன்னதாக, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரண உதவிகள் வழங்கிய விஜய்யை பார்த்து; அரசியலில் Work From Home செய்கிறார் என்றும் ஒருதரப்பினர் கிண்டல் செய்தார்கள்.
திரிஷாவுடன் கிசுகிசு: இதற்கிடையே விஜய்யையும், திரிஷாவையும் இணைத்து கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கப்பட்டுவருகிறது. ஆனால் அதில் துளியளவுக்கூட உண்மையில்லை; விஜய்யின் அரசியல் வருகையை எதிர்பார்க்காத சிலர் வேண்டுமென்றே இப்படியான அவதூறுகளை பரப்புகிறார்கள். எந்த அவதூறு பரப்பினாலும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தாக்கம் வீரியமாகவே இருக்கும் என்று அவரது தொண்டர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
திரிஷாவுடன் பயணம்?: இந்நிலையில் விஜய் மற்றும் திரிஷா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய்யும், திரிஷாவும் கலந்துகொண்டார்கள். சூழல் இப்படி இருக்க அவர்கள் இருவரும்; உதவியாளர்கள் நான்கு பேரும் என மொத்த ஆறு பேர் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கோவாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அதற்கு ஆதாரம் இதுதான் என்று சில புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. அதாவது டிக்கெட்டில் விஜய், திரிஷா உள்ளிட்டோரின் பெயர்கள் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும், இருவரும் செக்யூரிட்டி சோதனையிலும் இருப்பது போன்ற ஃபோட்டோக்களும் வெளியாகியிருக்கின்றன. இந்தப் புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டாகிவருகின்றன. அதேசமயம் இந்தத் தகவலில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











