Vijay: விஜய் மனைவி, குழந்தைகள் எங்கேப்பா காணோம்?.. தவெக கொடி அறிமுக விழா.. நெட்டிசன்கள் கேள்வி!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா இன்று நடைபெற்றது. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உருவான அந்த கொடியில் இரு புறமும் யானைகள் இடம்பெற்றுள்ளன. நடுவே உதய சூரியன் போல வாகை மலர் இடம்பெற்றுள்ளது. கட்சி கொடியை நடிகரும் தவெக தலைவருமான விஜய் ஏற்றி அறிமுகப்படுத்தினார்.

விஜய் கட்சிக் கொடியுடன் அதற்கான கொடி பாடலையும் உருவாக்கி விஷுவல் உடன் ஒளிபரப்பி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய்யின் குடும்பம் எங்கே காணோம் என்கிற கேள்வியை சோஷியல் மீடியாவில் பலரும் எழுப்பி வருகின்றனர்.

Vijay TVK Sangeetha Vijay

மேடையேறி பேசிய நடிகர் விஜய் தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் தனது கட்சியின் கொள்கைகள் குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், அதுபற்றி எல்லாம் கட்சி மாநாட்டில் விரைவில் பேசுவேன் என நன்றி கூறி விடைபெற்றார்.

அரசியலில் விஜய்: நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். கோட் படத்திற்கு அவரது சம்பளம் 200 கோடி என்றும் தளபதி 69 படத்திற்கு 250 கோடி என்றும் சொல்லப்படுகிறது. அதையெல்லாம் விட்டு விட்டு மக்களுக்கு சேவை செய்யப் போவதாகக் கூறி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறி அரசியலில் நுழைந்துள்ளார்.

Vijay TVK Sangeetha Vijay

கொடி அறிமுக விழா: ஆகஸ்ட் 22ம் தேதியான இன்று விஜய் தனது கட்சியின் கொடியை ஏற்றி அதனை அறிமுகம் செய்து வைத்தார். முன்னதாக மஞ்சள் நிறத்தில் விஜய்யின் உருவம் பதித்த கொடியை விஜய் ஏற்றி ஒத்திகை பார்த்த காட்சிகள் வெளியான நிலையில், கட்சிக் கொடியில் விஜய் முகமா? என விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், அது டம்மி கொடி தான் என்றும் உண்மையான கொடி ஆகஸ்ட் 22ம் தேதி தான் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கட்சிக் கொடி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

Vijay TVK Sangeetha Vijay

அம்மா, அப்பா பங்கேற்பு: நடிகர் விஜய்யின் பெற்றோர்களான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா சந்திரசேகர் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். தனது மகன் அரசியலுக்கு வந்த நிலையில், தங்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்ததை நினைத்து இருவர் முகத்திலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது.

Vijay TVK Sangeetha Vijay

மனைவி, குழந்தைகள் எங்கே?: சமீப காலமாகவே விஜய் கலந்துக் கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் விஜய்யின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. விஜய்யின் வாழ்க்கை பற்றியும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பார் விஜய் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய நிகழ்விலும் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா பங்கேற்கவில்லையே ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். அட்லீ மனைவியின் வளைகாப்பு, சமீபத்தில் நடைபெற்ற பாடலாசிரியர் விவேக்கின் மனைவி வளைகாப்பு, கல்வி விருது விழா என எதிலுமே இவர்கள் மூவரும் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X