மனைவியுடன் விஜய் பேச்சுவார்த்தை.. மனம் மாறினாரா சங்கீதா?
சென்னை: தமிழகத்தில் சினிமா மற்றும் அரசியலில் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வரும் விவகாரங்களில் ஒன்றாக நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா பற்றிய பல தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சங்கீதா ஏப்ரல் 20ந் தேதி செய்தியாளர்களை சந்திப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சங்கீதா மனு: தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது கணவர் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், குறிப்பாக ஒரு நடிகையுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருவதாகவும், அந்த நடிகையுடனான உறவை முறித்துக்கொள்ளுமாறு பல முறை சொல்லியும் அவர் கேட்காததால், எங்கள் திருமண உறவில் சிக்கல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனது கணவரின் வருமானத்தை கருத்தில் கொண்டு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் கோரி இருந்தார்.

விஜய்,திரிஷா சர்ச்சை: இது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளம்பிய நிலையில், நடிகை திரிஷா மற்றும் விஜய் தயாரிப்பாளர் திருமண வரவேற்பிற்கு ஒரே காரில், ஒரே நிற உடையில் கலந்து கொண்டது சோசியல் மீடியாவில் புயலை கிளப்பியது. அதோடு மட்டுமில்லாமல் மகாபலிபுரத்தில் நடந்த மகளிர் தினவிழாவில், மனைவி சங்கீதா குறித்து பேசிய விஜய் அதெல்லாம் "வொர்த்தே இல்லை" என பேசினார்.
முடிவில் மாற்றம்: இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி சங்கீதா செய்தியாளர்களை சந்தித்து தனது தரப்பை விளக்குவார் என்று தகவல்கள் வெளியானது. அந்த சந்திப்பில், விஜய் குறித்து பல முக்கிய தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின் படி, சங்கீதா ஏப்ரல் 20ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் தரப்பு சங்கீதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன் பின்னர் சங்கீதா தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே அவர் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications