PS 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய்... அட ஆமாம்ல இவருதான எக்ஸ் வந்தியத்தேவன்!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த மணிரத்னம் முடிவு செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் கடந்தாண்டு மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள PS 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவிருப்பதாக சொல்லப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2
மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியானது. இதனைத் தொடர்ச்சியாக அடுத்த மாதம் 28ம் தேதி இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இதனால் விரைவில் PS 2 ப்ரோமோஷன் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் PS 2 படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளான அக நக பாடல் வெளியானது.

PS 2 விழாவில் இணையும் லியோ
ஏஆர் ரஹ்மானின் இசையில் மனதை வருடும் மெலடியாக உருவாகியுள்ள அக நக பாடலுக்கு ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது. இது பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு செம்ம பாசிட்டிவான வைப் கொடுத்துள்ளது. இந்நிலையில், முதல் பாகத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா போன்று, PS 2 ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எக்ஸ் வந்தியத்தேவன்
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீரில் நடைபெற்றது. தற்போது அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு மொத்த லியோ குழுவினரும் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பியதாக தெரிகிறது. மேலும், காஷ்மீர் ஷெட்யூல் முடிவடைந்தது குறித்து மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவையும் லியோ டீம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொள்ளலாம் என்ற தகவல் வைரலாகி வருகிறது.

இதுதான் காரணமா
மணிரத்னம் தனது 3வது முயற்சியில் தான் பொன்னியின் செல்வன் படத்தை நனவாக்கியுள்ளார். இதற்கு முன்பு இரண்டு முறை இப்படத்தை தொடங்கி ஷூட் செல்ல முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. அதில், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், ராஜராஜா சோழனாக டோலிவுட் நடிகர் மகேஷ் பாபுவும் நடிக்கவிருந்தது. முக்கியமாக தற்போது கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கேரக்டரில் விஜய்யை நடிக்க வைக்க மணிரத்னம் முடிவு செய்திருந்தார். அதுமுடியாமல் போனதால் இப்போது பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்க வேண்டும் என மணிரத்னம் விரும்பியுள்ளாராம்.

நட்சத்திரங்களின் அணிவகுப்பு
அதன்படி பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் ஆகியோருடன் விஜய்யும் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குநர் பாரதிராஜாவும் பங்கேற்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினி, கமல், இயக்குநர் ஷங்கர் உள்ள்ட்ட பலர் கலந்துகொண்டனர். அதேபோல், இரண்டாம் பாகத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் களைக்கட்டும் என சொல்லப்படுகிறது.

ராஜராஜசோழன் மகேஷ் பாபு
இந்நிலையில், முதலில் ராஜராஜ சோழனாக நடிக்கவிருந்த மகேஷ் பாபு PS 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கும் வாய்ப்பு உள்ளதாகவே சொல்லப்படுகிறது. மகேஷ் பாபு தற்போது ராஜமெளலி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











