தளபதி 65…வெளிநாட்டில் ஷூட்டிங்..வெளியானது சூப்பர் தகவல் !
சென்னை : தளபதி65 படப்பிடிப்புக்காக இன்று இரவு விஜய் ஜார்ஜியா செல்லவிருப்பதாக தகவல்கள் வேகமாக பரவிவருகின்றன.
Recommended Video
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கஉள்ளார்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

250 கோடி வசூல்
பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றது. சுமார் 250 கோடி வரையில் வசூலை வாரிக்குவித்து புதிய சாதனை படைத்தது. இதையடுத்து, தளபதி65 தற்போது உருவாகி உள்ளது இதில் மூன்றாவது முறையாக அனிருத் விஜய் கூட்டணி இணைய உள்ளது.

உளவுத்துறை அதிகாரியாக
இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ரகசிய உளவுத்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இரண்டாவது கதாநாயகியாக அபர்ணா தாஸ் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

50 நாள் கால்ஷுட்
அதனைத் தொடர்ந்து விஜய்யின் விருப்பமான காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுவும் இப்படத்தில் இணைய உள்ளார். இதற்காக கிட்டத்தட்ட 50 நாட்கள் கால்ஷுட் வாங்கியுள்ளாராம் இயக்குனர் நெல்சன்.

ஜார்ஜியாவில் படப்பிடிப்பு
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்க உள்ளதாவும் அதற்காக இன்று இரவு விஜய் ஜார்ஜியா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜார்ஜியாவில் 10நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளதாவும் அதன் பின் ஐரோப்பாவில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











