அடுத்த 25 வருஷத்துக்கு விஜய் தான் CM.. முடிந்தால் அவரை சட்டமன்றத்தில் எதிர் கொள்ளுங்கள்.. பிரபலம் பளிச்
சென்னை: நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என்று உறுதி ஆகிவிட்டது. இன்னும் சில நாட்களில் விஜய் முதலமைச்சராக பதவியேற்க அதிக வாய்ப்புகள் உள்ளது. தனக்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவைப் பெற விஜய் மற்ற கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இப்படி இருக்கையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல், திமுக சட்ட மன்ற உறுப்பினர்களை சென்னையிலேயே தங்கச் சொல்லி திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் திமுகவும் அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க போவதாகவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என்றும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவியது. இப்படி இருக்கையில், இதற்கு தவெக தரப்பில் இருந்தும், தவெக ஆதரவாளர்கள் தரப்பில் இருந்தும் பேச்சுக்கள் அதிகமானது.

சட்டமன்றத்தில்: இப்படி இருக்கையில் இந்த பேச்சுக்கள் தொடர்பாக விமர்சகரும் தவெக ஆதரவாளருமான பிரசாந்த் ரங்கசாமி, தனது எக்ஸ் பக்கத்தில், " விஜய்யை முதலமைச்சராக விடுங்கள், அவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்யட்டும், அவரை சட்டமன்ற தேர்தலில் எதிர் கொள்ளட்டும், அது தான் ஜனநாயக முறை. விஜய் தவறு செய்தால் அதை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுங்கள், போராட்டம் நடத்துங்கள், மக்கள் மனதை வென்றெடுங்கள். அது தான் கண்ணியமான அரசியலாக இருக்கும்.
25 வருஷத்துகு: திமுகவும் அதிமுகவும் இணைந்தால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் விஜய் முதலமைச்சராக இருப்பதை உறுதி செய்யும். இந்த வரலாற்றுப் பிழையைச் செய்யாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல், அதற்கு விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications