அடுத்த எம்ஜிஆராக மாறுகிறாரா விஜய்?.. நெல்லை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. செல்ஃபி எடுத்து ஹேப்பி!

சென்னை: 2026ம் ஆண்டு கப்பு முக்கியம் பிகிலு என லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசிய நிலையில், அதற்கு ஏற்ற வகையில் தொடர்ந்து ஒவ்வொரு விஷயமாக செய்து வருகிறார் விஜய். முதலில் மாணவர்களை சந்தித்து விருதுகளை வழங்கிய விஜய் தற்போது நெல்லையில் வெள்ளத்தால் பாதித்த மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை அளித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மக்கள் பாதிக்கப்பட்ட போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு கட்டளையிட்டு உடனடியாக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனக் கூறினார். நடிகர் விஜய் வந்து நேரில் உதவ மாட்டாரா என விமர்சனங்கள் எழுந்தன.

Vijay will be the next MGR of Tamil Nadu?

நெல்லையில் விஜய்: இந்நிலையில், விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், நெல்லையில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நிவாரண உதவிகளை வழங்கி உள்ளார். மக்களை தொடர்ந்து இனி விஜய் சந்திப்பார் என்றே தெரிகிறது. அதற்காக முழு வீச்சில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தயாராகியும் வருகிறார்.

Vijay will be the next MGR of Tamil Nadu?

அடிக்க வேண்டாம்: நடிகர் விஜய் நெல்லையில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த மண்டபத்துக்குள் வந்தார். ரசிகர்களின் கூட்டத்துடன் விஜய் வந்த போது, ரசிகர்களை உள்ளே விடக் கூடாது என நினைத்து விஜய் வந்ததும் கதவை சாத்த தயாராக இருந்த நபர் திடீரென கதவை சாத்தியதும் விஜய் தடுக்கி விழ பார்த்தார். ஆனால், உடனடியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அவரை பிடித்து விட்டனர். கதவை சாத்திய நபரை புஸ்ஸி ஆனந்த் அடித்த நிலையில், அடிக்காதீங்க ப்ளீஸ் என விஜய் கேட்டதும் புஸ்ஸி ஆனந்த் அமைதியானார்.

Vijay will be the next MGR of Tamil Nadu?

எம்ஜிஆராக மாறுகிறாரா விஜய்?: நடிகர் விஜய் மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கிய நிலையில், அவருடன் மகளிர் மற்றும் குழந்தைகள் என பலரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் கையில் செல்போனை வைத்துக் கொண்டு விஜய்யுடன் செல்ஃபி எடுக்க அலைமோதியது எல்லாம் வேற லெவல். அவர்களுக்காக ரசிகர்களுடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ஒரு பாட்டி அப்படியே விஜய்யின் கன்னத்தை தொட்டு முத்தம் கொடுத்ததை எல்லாம் பார்த்தால் விஜய் அடுத்த எம்ஜிஆராக மாறி வருகிறாரா? என்கிற கேள்வி தான் எழுந்துள்ளது.

தேர்தலில் போட்டியிடுவது கன்ஃபார்ம்: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடுவார் என்றே தெரிகிறது. தளபதி 68 படத்தை முடித்து விட்டு 2 ஆண்டுகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களை நேரில் சந்தித்து மக்கள் பலத்தை சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார் என்றே கூறுகின்றனர். அரோக்கியமான அரசியல் செய்தால் நடிகர் விஜய்க்கு மக்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும் என்றே தெரிகிறது. அதற்காக இதை போல நடிகர் விஜய் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X