அஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்!
Recommended Video

சென்னை: அஜித், விஜய் இருவருமே அரசியலுக்கு வருவார்கள் என தயாரிப்பாளர் பிடி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு முதல்வர் ஆசை வந்துவிட்டதாக பலரும் சொல்லி வருகின்றனர். விஜய்யின் பேச்சுகள், திரைப்பட வசனங்கள் மற்றும் செயல்பாடுகள் எல்லாம் முதலமைச்சர் நாற்காலியை குறிவைத்தே இருக்கின்றன என்றும் பரவலான கருத்து நிலவுகிறது.

இந்த நிலையில், பந்தா பரமசிவம், புலி, போக்கிரி ராஜா போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளரும் இயக்குனருமான பிடி.செல்வகுமார், இன்னும் ஏழு ஆண்டுகளில் விஜய் அரசியலுக்கு வருவார் என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய் இன்னும் கொஞ்சம் நாளைக்கு படம் நடிக்கட்டும். அவரை எவ்வளவு அதிகமாக டார்ச்சர் செய்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் அரசியலுக்கு வருவார். விஜய்யின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும்போது என்னுடைய கணிப்புப் படி இன்னும் ஏழு ஆண்டுகளில் அரசியலுக்கு வருவார் என தெரிவித்தார்.
மேலும் அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்றும் ஆனால் இருவரின் ஜாதக அமைப்பையும் பார்க்கும்போது முதல்வராகும் கிரக நிலை விஜய்க்கே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











