மினி தேர்தல்.. விஜய்க்கு பொங்கலுக்கே ஆரம்பம்.. பராசக்தி vs ஜன நாயகன்.. மக்கள் யார் பக்கம்?

சென்னை: நடிகர் விஜய் அடுத்த ஆண்டு தமிழ்நாடு தேர்தல் களத்தில் களமிறங்கி வெற்றிக்கொடி நாட்டி முதலமைச்சராக மாறுவேன் என தொடர்ந்து மார்தட்டி வருகிறார். இந்நிலையில், வரும் பொங்கலுக்கே அவருக்கு ஒரு மினி தேர்தலை திமுக மறைமுகமாக வைத்து விட்டது என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

ரெண்டே பேருக்கு நடுவே தான் போட்டி என்றும் திமுக ஒரு தீயசக்தி என டைரக்ட்டாக அட்டாக் செய்து விஜய் பேசி வரும் நிலையில், பராசக்தி படத்தை ஜனவரி 14ம் தேதியில் இருந்து ஜனவரி 10ம் தேதியே ரிலீஸ் செய்து விஜய்க்கு மினி தேர்தலை நடத்தப் போகின்றனர்.

Vijay will face a Mini Election on Pongal 2026 with Parasakthi clash
Photo Credit:

மெகா சீரியல் வாரிசு படத்தை வைத்தே அ. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படத்தையே பாக்ஸ் ஆபீஸில் விஜய் துவம்சம் செய்தார் என்றும் அ.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் கூட்டணி வைத்தால், சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் பஞ்சர் ஆகிவிடும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விஜய்க்காக ஒரு நாள் மட்டுமே: துப்பாக்கி கொடுத்த விஜய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி 9ம் தேதி பராசக்தி படம் ரிலீஸ் ஆகாமல், ஜனவரி 10ம் தேதி வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என அனைத்து விஜய்யின் ரசிகர்களும் நண்பர்களும் இணைந்து யூ டூ ப்ரூட்டஸ் என விஜய்க்கு நெருக்கடி கொடுக்க தயாராகி விட்டனர். தமிழ் சினிமாவில் இருந்து நிரந்தரமாக விலகி தமிழ் நாட்டு மக்களுக்காக உழைக்கப் போகிறேன் என சொல்லும் விஜய்க்கு மரியாதை ஒரு நாள் தானா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Vijay will face a Mini Election on Pongal 2026 with Parasakthi clash

மினி தேர்தல்: 70 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வேரூன்றி, தற்போது ஆளுங்கட்சியாக அசைக்க முடியாத சக்தியுடன் இருக்கும் திமுகவை தோற்கடித்து முதலமைச்சர் ஆவேன் என்கிற வைராக்கியத்துடன் விஜய் அரசியல் களத்திற்கு மக்களை நம்பி களமிறங்குகிறார். செல்லும் இடமெல்லாம் விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. கரூரில் 41 பேர் பலியான பிறகும் புதுச்சேரி மற்றும் ஈரோட்டில் மக்கள் கூட்டம் குறையவில்லை. குழந்தைகளையும் அழைத்து வருகின்றனர். சன் டிவியில் விஜய் படம் போடவில்லை என சிறுமி அழுதுகொண்டே பேசிய வீடியோ வைரலானது. இந்நிலையில், சினிமாவில் இத்தனை ஆண்டுகள் ரஜினிக்குப் பிறகு பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை ஈட்டிய விஜய் தனது கடைசி படத்தை வெற்றிப் படமாக கொடுத்து இந்த மினி தேர்தலில் முதலில் வெற்றிப் பெறுவாரா? என்கிற கேள்வி தான் தற்போது திரையுலகை சூழ்ந்திருக்கிறது.

மக்கள் யார் பக்கம்?: பைசன் படத்தை விட டியூட் படத்தை அதிகம் பார்த்து ரசித்தார்கள் மக்கள். துலகர் சல்மானின் கிளாசிக் படமான காந்தா படத்தை கண்டுகொள்ளவே இல்லை. இந்தி எதிர்ப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையமாக வைத்து கிளாசிக் படமாக உருவாகியுள்ள பராசக்தி படத்தை கொண்டாடப் போகிறார்களா? அல்லது விஜய்க்காக ஜன நாயகன் படத்தை பொங்கல் ரேஸில் வெற்றிப் பெற செய்யப் போகிறார்களா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X