Vijay: ஜெயிச்சா 6 சிலிண்டர்.. இப்போ ஒரு சிலிண்டர் கொடுங்களேன்.. விஜய்க்கு ப்ளூ சட்டை மாறன் செக்!
சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடனே ஒவ்வொரு வீட்டுக்கும் வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக தருவேன் என வாக்குறுதி கொடுத்தார்.
மேலும், 1 பவுன் நகை, மாதம் மாதம் மகளிருக்கு 2500 ரூபாய் பணம் என மிகப்பெரிய லிஸ்ட்டே போட்டு அடுக்கினார். அவரது இலவச அறிவிப்புகளை பார்த்து பல பெண்களே ஷாக் ஆகிவிட்டனர். இதெல்லாம் உலக மகா உருட்டுடா சாமி என்றும் கலாய்த்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்பவே திமுக ஆட்சியில் அதிகப்படியான இலவசங்களை கொடுத்து தமிழ்நாட்டை பெரும் கடன் சுமைக்கு ஆளாக்கியிருக்கும் நிலையில், மாற்று அரசியல் கொண்டு வராமல் விஜய்யும் திமுக, அதிமுக மாதிரி வேறு வழியில்லாமல் இலவசங்களை அடுக்கி விட்டார் என விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. இந்நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடத் தொடங்கியுள்ள நிலையில், இப்போ ஏன் நீங்க வீட்டுக்கு ஒரு இலவச சிலிண்டர் தரக்கூடாது என செக் வைத்துள்ளார்.
ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை: விஜய்க்கு எந்தளவுக்கு முட்டுக் கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு சில பிரபலங்களே கொடுத்து வந்தனர் என்றும் இனிமேல் விஜய்க்கு முட்டுக் கொடுக்க முடியாது என பிரபலங்கள் பேச ஆரம்பித்து இருப்பது தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. மேலும், ஆதரவு கொடுத்த ஒரு சில கட்சிகளும் திமுகவுடன் கூட்டணி வைக்க ரெடியாகி விட்டனர். விஜய் ரசிகர்கள் மற்றும் பெரும்பாலான ரசிகைகள் இன்ஸ்டாகிராமில் விஜய் தான் லேட்டஸ்ட் கன்டென்ட் என அவரை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். விஜய் யாரை வேண்டுமானாலும் வச்சிக்கலாம். ஆனால், என் புருஷன் இன்னொருத்தியை பார்த்தால் விளக்கமாறு பிஞ்சிடும் என ரீல்ஸ் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.
வீட்டுக்கு ஒரு சிலிண்டர் கொடுங்க விஜய்: தேர்தலில் ஜெயித்தால் வீட்டுக்கு ஆறு சிலிண்டர் தருவேன் என்றீர்கள். அதற்கு டீசர் போல.. போர்க்கால அடிப்படையில் வீட்டுக்கு ஒரு சிலிண்டர் தரலாமே? சிலிண்டர் விலையை 60 ரூபாய் ஏற்றியபோது.. ஏன் பக்கம் பக்கமாக உங்கள் தனி பாணியில் ஒரு அறிக்கை கூட விடவில்லை? விலையேற்றத்திற்கு எதிராக ஏன் போராடவில்லை? ஈரான் போருக்கு கூட காரணம் திமுகதான்.. என அந்த பழியையும் தூக்கி அக்கட்சி மேல் இன்னும் ஏன் போடவில்லை?" என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார்.
திமுகவை கேட்க தில் இல்லை: ப்ளூ சட்டை மாறன் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவுக்கு கீழ் விஜய் ரசிகர்கள் இப்போது ஆட்சியில் இருக்கும் திமுகவை கேட்க வேண்டியது தானே என கேள்வி எழுப்பி வருகின்றனர். "ஆள்ற கட்சியையும் எதிர்க்கட்சியும் கேட்க உனக்கு துப்பில்லை எல்லாத்துக்குமே விஜய் தான் உனக்கு பதில் சொல்லணுமாடா..." என கேள்வி எழுப்ப அதற்கு ப்ளூ சட்டை மாறன் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











