வேறலெவல் மனுஷன்யா.. நெல்லை மக்களுக்கு உதவி செய்ய நேரடியாக செல்லும் விஜய்.. நல்ல விஷயம்!

சென்னை: நடிகர் விஜய் கேப்டன் விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டதும் ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு சென்னைக்கு வந்த அவர் நள்ளிரவே விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கண்ணீர் மல்க விஜய் அஞ்சலி செலுத்திய காட்சிகள் ரசிகர்களை ரொம்பவே நெகிழ வைத்தது. இந்நிலையில், இன்று நெல்லை மக்களுக்கு உதவி செய்ய விஜய் நேரடியாக செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என தனது விஜய் மக்கள் இயக்கத்துக்கு விஜய் ஆணையிட்டு இருந்தார். இந்நிலையில், பெரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நேரடியாக விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாராம்.

Vijay will help Nellai people today

தளபதி 68 படப்பிடிப்புக்கு பிரேக்: ஹைதராபாத்தில் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், அதற்கு திடீரென பிரேக் விட்டு தற்போது விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் புத்தாண்டு முடித்து விட்டு அடுத்த கட்டமாக இலங்கையில் நடைபெற உள்ள படப்பிடிப்புக்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கண் கலங்கி அழுத விஜய்: அப்பா சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை படம் விஜயகாந்துக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 10க்கும் மேற்பட்ட விஜயகாந்த் படங்களை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். சிறு வயதில் இருந்தே அதிக நேரத்தை விஜயகாந்திடம் செலவு செய்த விஜய் செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்தின் தம்பியாக நடித்திருப்பார். இந்நிலையில், விஜயகாந்தின் மறைவு செய்தி அறிந்ததும் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு நடிகர் விஜய் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பெரும் கூட்ட நெரிசலில் விஜய் சென்றபோது ரசிகர்கள் செய்த அட்டூழியங்களும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.

நெல்லை மக்களுக்கு உதவி: இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு இன்று விஜய் நலத்திட்ட உதவிகளை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருநெல்வேலியில் உள்ள கேடிசி நகரில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை செய்ய உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X