Vijay - விட்டுக்கொடுக்காத தளபதி.. நெல்சன் திலீப்குமாருடன் மீண்டும் இணையும் விஜய்.. உறுதி செய்த கேமராமேன்
சென்னை: Vijay Nelson Dilipkumar (விஜய் நெல்சன் திலீப்குமார்) நெல்சன் திலீப்குமாருடன் விஜய் மீண்டும் இணைவார் என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தெரிவித்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்தின் மீது விஜய் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். அதற்கு காரணம் பீஸ்ட்டுக்கு முன்னர் நெல்சன் இயக்கியிருந்த டாக்டர் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.
ரோஸ்ட்டான பீஸ்ட்: சிவகார்த்திகேயனை வைத்து தரமான படத்தை கொடுத்துவிட்டார் எனவே விஜய்யை வைத்து மிகச்சிறந்த படத்தை கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குக்கு சென்றனர். ஆனால் பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களையே திருப்திப்படுத்த தவறியது. விமர்சன ரீதியாக கடுமையான தாக்குதல்களை சந்தித்தது பீஸ்ட் திரைப்படம்.
நெல்சன் திலீப்குமார்: குறிப்பாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மீது வரம்பு மீறிய விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஒருகட்டத்தில் அவர் அவமானப்படுத்தப்பட்டார் என்றெல்லாம் பேசப்பட்டன. சூழல் இப்படி இருக்க பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்கு பிறகு படக்குழுவை அழைத்து ஒரு விருந்து வைத்தார் விஜய். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் படுதோல்வியடைந்த படத்துக்கே விருந்தா என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

காரணம் என்ன?: இந்த சூழலில் அந்த விருந்தில் என்ன நடந்தது என்பது குறித்து லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "பீஸ்ட் படம் வெளியானதற்கு பின்பு பார்ட்டி ஒன்று நடந்தது. அது பீஸ்ட் படத்துக்காக நடக்கவில்லை. நெல்சன் திலீப்குமாருடன் மீண்டும் இணையப்போகிறேன் என்று விஜய் சொல்வதற்காக நடந்த பார்ட்டிதான் அது. அந்தப் பார்ட்டியில்தான், நான் லியோ படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப்போகிறேன் என்பதையும் அவர் தெரிவித்தார்" என்றார்.
ஃபுல் ஃபார்மில் நெல்சன்: மனோஜ் பரமஹம்சாவின் இந்த பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக விஜய் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி பீஸ்ட்டில் விட்டதை இந்தப் படத்தில் பிடிக்கும். ஏனெனில் ஜெயிலர் படம் கொடுத்த வெற்றி நெல்சன் திலீப்குமாருக்கு பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கும். அந்த ஃபார்மோடு விஜய்யுடன் மீண்டும் இணைந்தால் கண்டிப்பாக படம் மெகா ஹிட்தான் என கூறிவருகின்றனர்.

லியோ: முன்னதாக விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாக படத்துக்கு சுமாரான ரெஸ்பான்ஸ் கிடைத்தாலும் வசூல் ரீதியாக ஒருவார முடிவில் 461 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. தற்போது விஜய் வெஙக்ட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











