விஜய் எப்பவும் பழச மறக்க மாட்டார்... ராஜாவின் பார்வையிலே தயாரிப்பாளர் பகிர்ந்த முக்கிய நிகழ்வு!
சென்னை : தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நடிகர்களாக உள்ளவர்கள் விஜய் மற்றும் அஜித்
விஜய் மற்றும் அஜித் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்துள்ளனர் அப்படத்தை தயாரித்த இயக்குனர் சௌந்தரபாண்டியன்
தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த ராஜாவின் பார்வையிலே தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியன் விஜய் எப்பவும் பழச மறக்காதவர் என முக்கிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இருவரின் படங்கள் ஒன்றாக
தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நடிகர்களாக உள்ள விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் மாறி மாறி வசூல் சாதனைகளை செய்து வருகிறது. கடைசியாக விஜய்க்கு ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஒரே சமயத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸை தெறிக்க விட்டது.அதன் பிறகு இருவரின் படங்கள் ஒன்றாக எப்போது வெளியாகும் என ஒட்டுமொத்த திரையுலகமே ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளது.கோலமாவு கோகிலா,டாக்டர் உள்ளிட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையில் வெளியான இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது

இரு மொழிகளிலும்
இந்நிலையில் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று கொண்டுள்ளது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்

பிரம்மாண்ட பொருட்செலவில்
நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஹாலிவுட் தரத்தில் சண்டைக்காட்சிகளில் விருவிருப்பான பைக் ரேஸிங் என தெரிக்கவிட்ட வலிமை வெற்றியை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் நடித்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார்

ராஜாவின் பார்வையிலே
இவ்வாறு தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
1995ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் ஸ்ரீ மாசாணி அம்மன் மூவிஸ் சௌந்தரபாண்டியன் தயாரிப்பில் வெளியானது. ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய் லீட் ரோலில் நடித்திருப்பார். அஜித் கேமியோ ரோலில் சில காட்சிகள் வந்து செல்வார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் விஜய்யின் திருமண விழாவிற்கு சென்ற ராஜாவின் பார்வையிலே பட தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியன் ரசிகர்களோடு ரசிகர்களாக வரிசையில் நின்று சென்றுள்ளார்.

விஜய் எப்பவும் பழச மறக்க மாட்டார்
அதை கவனித்த விஜய் மேடையில் இருந்தபடியே நீங்கள் ஏன் கூட்டத்தோடு கூட்டமாக வருகின்றீர்கள் என நேரடியாக மேடைக்கு அழைத்தார். மேலும் மனைவி சங்கீதாவிடம் தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியனை அறிமுகம் செய்து வைத்தாராம். அப்போது அருகில் ஒரு மிகப் பெரிய ப்ரடியூசர் இருந்தாராம், இருந்தும் தனக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது மிகப் பெருமையாக இருந்தது என தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் இந்த முக்கிய நிகழ்வை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications